ஒருத்தர் முன்னுக்கு வரணும்னா கண்டிப்பா இதை முதலில் பண்ணனும்… ஏ. ஆர். ரஹ்மானின் அட்வைஸ்…

By admin on ஆவணி 29, 2024

Spread the love

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை ஆர்கே சேகர் மலையாள திரைப்பட துறையில் பணியாற்றியவர். சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்ததால் குடும்பத்தின் வருமானத்திற்காக தன் தந்தை இசை கருவிகளை வாடகைக்கு விட்டு வந்த வருமானத்தில் பியானோ, ஹார்மோனியம் மற்றும் கீதார் வாசிக்க கற்றுக் கொண்டார் ஏ ஆர் ரகுமான். தனது 11 வயதில் இளையராஜா இசை குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். எம் எஸ் விஸ்வநாதன், ஜாகிர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார் ஏ ஆர் ரகுமான்.

   

1992 ஆம் ஆண்டு தனது வீட்டிலேயே இசை கலையகத்தை அமைத்தார் ஏ ஆர் ரகுமான். அந்த ஆண்டு மணிரத்தினம் தனது திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமானுக்கு வாய்ப்பளித்தார். அப்படி ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ ஆர் ரகுமான். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகி ஏ ஆர் ரஹ்மானுக்கு திருப்புமுனையாக அமைந்தது. முதல் படத்தின் மூலமாகவே தேசிய விருதை வென்றார் ஏ ஆர் ரகுமான்.

   

தொடர்ந்து வெற்றி படங்களில் பணியாற்றிய ஏ ஆர் ரகுமான் இசை புயல் என்று அழைக்கப்படுகிறார். தனது இசையை காக ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, தேசிய திரைப்பட விருது போன்ற புகழ்பெற்ற விருதுகளை பெற்றவர் ஏ ஆர் ரகுமான். ஹாலிவுட் திரைப்படம் ஆன ஸ்லம்டாக் மில்லினர் என்ற ஆங்கில திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றார் ஏ ஆர் ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது. 2010 ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மபூஷன் விருதினை பெற்றார் ஏ ஆர் ரஹ்மான். மேலும் இவர் ஆசியாவின் மெர்ச்சண்ட் என்றும் அழைக்கப்படுகிறார்.

 

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ஏ ஆர் ரகுமான் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களையும் முன்னேறுவதற்காக தான் செய்த முயற்சிகளையும் பகிர்ந்து கொண்டு உள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால் நாம் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால் நம் மனதை கட்டுப்படுத்த வேண்டும் கட்டி போட வேண்டும். நாம் என்னவாக ஆக விரும்புகிறோமோ நம் லட்சியம் எதுவோ அதை நோக்கி மட்டுமே நாம் சிந்தனைகளும் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நாம் வாழ்வில் ஜெயிக்க முடியும் என்று கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான்.