INSPIRATION
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே… மகனின் மருத்துவ செலவுக்காக இப்படி செய்த தந்தை…
கோயம்புத்தூர் ரயில் நிலையம் அருகே ரயில் பெட்டி வடிவத்தில் அமைக்கப்பட்ட தனியார் உணவகம் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. தற்போது இந்த உணவகத்தை விளம்பரப்படுத்தும் விதமாக பிரியாணி சாப்பிடும் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிட்டால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு எனவும் ஐந்து பிரியாணி சாப்பிட்டால் 50 ஆயிரம் ரூபாய் பரிசு எனவும் 3 பிரியாணி சாப்பிட்டால் 25 ஆயிரம் ரூபாய் பரிசு எனவும் அறிவித்து இருந்தனர்.
இதில் கலந்துகொள்ள மக்கள் ஆர்வம் காட்டினர். ஆனால் போட்டி துவங்குவதற்கு முன்பே வயிற்று சம்பந்தமான பிரச்சனை மற்றும் அலர்ஜி எதுவுமே இல்லை என்பதை உறுதி செய்து பார்மில் கையெழுத்து வாங்கிவிட்டு போட்டியை தொடங்கினர். கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்டோர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட ஒரு நபர் அங்கிருந்தவர்களின் மனதை நெகிழச் செய்துள்ளார்.
அவர்தான் கணேசமூர்த்தி என்னும் கால் டாக்ஸி டிரைவர் ஆவார். அவர் 3 பிரியாணி சாப்பிட்டு முடித்து இருந்தார். மூன்றாவது பிரியாணி சாப்பிட்டு முடிக்கும் போதே வாந்தி எடுத்து மயக்கம் நிலைக்கு சென்றுள்ளார் கணேசன் மூர்த்தி. பின்னர் அழுது கொண்டே கண்ணீருடன் இருந்த கணேசமூர்த்தியிடம் கேட்கும் பொழுது நான் எனக்காக இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை ஆட்டிசம் பாதித்த என் மகனுக்காக கலந்து கொண்டேன் என்று கண்ணீர் மல்க பேசி இருக்கிறார்.
மேலும் கணேசமூர்த்தி என் மகனின் மருத்துவச் செலவிற்கும் படிப்பு செலவிற்கும் என்னுடைய வருமானம் பத்தவில்லை. அவன் ஆட்டிசம் பாதித்தால் வீட்டில் வைத்து பார்க்க ரொம்ப சிரமமா இருந்தது. எல்லாரும் முடிஞ்ச அளவுக்கு உதவி பண்ணாங்க. அப்புறம் அவன ஸ்பெஷல் ஸ்கூல்ல கொண்டு போயி அங்க இருந்தவங்க கால்ல விழுந்து அவனை சேர்த்துக்க சொல்லி சொன்னோம். அவங்க மாசம் 19000 கட்ட சொல்றாங்க. எனக்கு அந்த அளவுக்கு வருமானம் இல்லைன்னு சொன்ன அப்போ உங்க மனைவி படிச்சிருக்காங்களான்னு கேட்டாங்க என் மனைவி படிக்கல எட்டாங்கிளாஸ் தான் படிச்சிருக்காங்க அப்படின்னு சொன்னேன். அப்புறம் அவங்கள அங்க வேலைக்கு சேர்த்துகிட்டாங்க. என் மனைவிக்கு 10,000 ரூபாய் சம்பளம். அது அவங்க புடிச்சுக்குவாங்க. மேற்கொண்டு ஒன்பதாயிரம் ரூபாய் நான் கட்டணும். இந்த போட்டியில் ஜெயிச்சு இந்த ரூபா வந்துச்சுன்னா என் மகனின் படிப்பு செலவுக்கு மருத்துவ செலவுக்கு ரொம்ப உதவியா இருக்கும் அப்படின்னு தான் நான் கலந்துக்கிட்டேன் என்று கண்ணீரோடு பேசி இருந்தது அங்கு இருந்தவர்கள் அனைவரையும் நெழ்ச்சி அடைய செய்தது.
போட்டி முடிந்த பிறகு போட்டியின் முடிவில் யாரும் எதிர்பாரா விதமாக கால் டாக்ஸி ட்ரைவர் கணேசமூர்த்தி தரவரிசை பட்டியலில் முன்னுக்கு வந்து இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே என்ற வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக தன் மகனுக்காக தன் உயிரையும் பணயம் வைத்து போட்டியில் கலந்துகொண்டு வென்ற இந்த கால் டாக்ஸி டிரைவர் கணேசமூர்த்திக்கு அனைவரும் வாழ்த்து கூறினர்.