CINEMA
புதிய சீரியலை களமிறக்கும் விஜய் டிவி.. வெளியான அசத்தல் ப்ரோமோ..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு இருக்கும். அது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களையும் மக்கள் விரும்பி பார்ப்பார்கள். இளைஞர்கள், சுட்டீஸ், வீட்டு பெண்கள் என அனைவரையும் கவரும் விதமாக விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் அமைந்திருக்கும்.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி உள்ளிட்ட சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் டாப்பில் இருக்கும். இந்த நிலையில் விஜய் டிவியின் ஒரு சீரியல் முடிவுக்கு வர போகிறது. ஆனால் அது எந்த சீரியல் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் புதிய சீரியலின் ப்ரோமோ மட்டும் வெளியாகி உள்ளது.
அந்த சீரியலின் பெயர் கண்மணி அன்புடன். ஏற்கனவே சீரியலின் பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டு ப்ரோமோக்கள் ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த நிலையில் கண்மணி சீரியலின் மூன்றாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகியுள்ளது. அதில் கதாநாயகனின் என்ட்ரி இடம்பெற்றுள்ளது. ப்ரோமோவை அசத்தலாக இருக்கும் நிலையில் சீரியல் எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.