முன்னாள் அமைச்சரும், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகத்திற்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தனது உயிருக்குக் கடுமையான அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, தனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கக் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சி.வி.சண்முகத்தின் உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தல் மற்றும் அவருக்கான பாதுகாப்புத் தேவையை மனுதாரர் தரப்பு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதை ஏற்றுக்கொண்டது. இதன் அடிப்படையில், அவருக்கு உடனடியாகத் தகுந்த ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக ஆணையிட்டுள்ளது.
