actor arjun

நான் ஆக்சன் ஹீரோ நடிகராக மாறியது ஏன்? – நடிகர் அர்ஜூன் சொன்ன சீக்ரெட்!

By Elango on மாசி 13, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகர் அர்ஜூன். அதனால் அவரை ஆக்சன் கிங் என்றும் ரசிகர்கள் அழைக்கின்றனர். நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து நடிகர் அர்ஜூன் கூறியதாவது, நான் சினிமாவுக்கு வந்த புதுசுல எனக்கு நடிப்புன்னா என்னான்னு தெரியாது. என் உடல் ஒன்று தான் எனக்கு தகுதியாய் இருந்தது.

அதே மாதிரி நான் படத்துல புரூஸ்லி மாதிரி பண்ண காரணம் 1978ல் எங்க மாமா தான் முதல்முறையா புரூஸ்லியோட படத்துக்கு என்னை கூட்டிட்டு போனார். அந்த படத்தை பார்த்துட்டு தியேட்டர்ல அப்படி கத்துனேன். வீட்டுக்கு வந்து நான் கராத்தே கத்துக்கணும்ன்னு அப்பா கிட்ட சொல்லி கராத்தே கிளாஸ் சேர்ந்தேன். நான் பார்த்த முதல் ஆக்சன் ஹீரோ புரூஸ்லி தான். ஆனால் அதே மாதிரி அவரோட சண்டையைத் தாண்டி அவரோட தத்துவங்கள் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நடிகர் அர்ஜூன் கூறியிருக்கிறார்.