இங்கிலாந்து ராணி எலிசபெத் 1997ம் ஆண்டில் இந்தியா வருகை தந்தார். அப்போது அவரை நேரில் சென்று நடிகர் கமல்ஹாசன் அழைத்தார். அவரது கனவு படமான மருதநாயகம் படப்பிடிப்பை அவர் துவங்கி வைத்தார். இந்த விழாவில் அன்றைய முதல்வர் கருணாநிதி நடிகர்கள் சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் போன்றவர்கள் கலந்துக்கொண்டனர். மேலும் இந்த விழாவில் இயக்குனர் மணிவண்ணனையும் கலந்து கொள்ள கமல் அழைத்துள்ளார்.
ஆனால் மணிவண்ணன் அந்த விழாவுக்கு வர மறுத்துள்ளார். அவங்க சுதந்திரப் போராட்டத்தில் நம்மள அடிச்சு விரட்டினவங்க. அவங்களை மறுபடியும் மகாராணின்னு நீ கூட்டிட்டு வருவே? நான் அவங்க முன்னாடி போய் தலை குனிஞ்சு நிக்கணுமா? இது அசிங்கமா இல்லையா? என்று மணிவண்ணன் கமலஹாசனிடம் கோபமாக பேசியதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.
