actor santhanam

அது இறைவன் கொடுத்த வரம்… – நடிகர் சந்தானம் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

By Elango on மாசி 13, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறியவர் நடிகர் சந்தானம். நடிகர் ஆர்யாவும் சந்தானமும் மிகவும் நெருக்கமான நண்பர்கள். பாஸ் என்கிற பாஸ்கரன் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உள்ளிட்ட பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சந்தானம் கூறியதாவது, ஆர்யா தினமும் 5 வேளை தொழுவான். அல்லா அல்லான்னு அல்லா மேல எப்பவும் ரொம்ப பக்தியா இருப்பான்.

நான் சிவா சிவான்னு சிவனேன்னு எப்பவும் கும்பிட்டுட்டு இருப்பேன். ஆனா அவனோடு சேர்ந்து நான் மசூதிக்கு போய் இருக்கேன். என்னோட சேர்ந்து அவன் கோயிலுக்கு வந்திருக்கான். நாங்க ரெண்டு பேரும் சினிமாவுல மட்டும் இல்லாம அதையும் தாண்டி எல்லாத்திலேயும் ஒத்துமையா இருக்கோம். அது இறைவன் கொடுத்த வரம் என்று நான் நினைக்கிறேன் என்று சந்தானம் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.