நீ பெற்ற தாயா?.. மறுமணத்திற்காகக் தடையாக இருந்த குழந்தை… கிணற்றில் வீசப்பட்ட 11 மாத பிஞ்சு உயிர்… அடுத்து காத்திருந்த அதிர்ச்சி… புனேயில் பயங்கரம் சம்பவம்…!!

Spread the love

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் ரஞ்சன்காவ் பகுதியைச் சேர்ந்த பூஜா பவார் (22) என்ற பெண், தனது 11 மாத ஆண் குழந்தையைத் தலையில் மோதி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் தனது மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என்று பூஜாவின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் தேடி வந்தனர். இதில் கடந்த 5-ம் தேதி ஜம்புட் கிராமத்தில் மட்டும் தனியாக இருந்த பூஜாவை போலீஸார் கண்டுபிடித்தனர்.

ஆரம்பத்தில், குழந்தை தவறி கீழே விழுந்து இறந்ததால் பயத்தில் கிணற்றில் வீசிவிட்டதாகப் பூஜா நாடகமாடினார். இருப்பினும், போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். தனது கணவரைப் பிரிந்து வேறொரு திருமணம் செய்துகொள்ளத் தான் ஆசைப்பட்டதாகவும், அதற்குத் தனது 11 மாத குழந்தை தடையாக இருந்ததாலும், குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருந்ததாலும் ஆத்திரத்தில் இந்தக் கொடூரத்தைச் செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவத்தன்று குழந்தையின் தலையைத் துணி துவைக்கும் கல்லில் ஓங்கி மோதி கொலை செய்துவிட்டு, பிணத்தை ஒரு பையில் கட்டி விவசாயக் கிணற்றில் வீசியதாகத் தெரிவித்தார். பூஜா அடையாளம் காட்டிய கிணற்றிலிருந்து குழந்தையின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இதையடுத்து, பெற்ற குழந்தையையே கொலை செய்த பூஜா பவாரைக் கொலை வழக்கில் கைது செய்த போலீஸார், அவரைச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் புனே பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

BIG BREAKING: தவெகவில் இணைகிறார் கடம்பூர் ராஜு.. காலையிலேயே EPS தலையில் விழுந்த இடி..!!

தமிழக அரசியல் வட்டாரத்தில் மிக முக்கிய திருப்பமாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் இன்று நடிகர்…

7 minutes ago

அடுத்த விக்கெட் காலி..! அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைந்த கரு.நாகராஜன்… சரியும் பாஜக கோட்டை… தமிழக அரசியலில் பெரும் பூகம்பம்..!

பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த கரு.நாகராஜன் கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக பாஜகவில் இருந்து அண்மையில்…

12 minutes ago

திடீர் பரபரப்பு..! 25 மேயர்களில் 1 மேயர் பதவியையாவது… தில் இருந்தா ஜெயிச்சு காட்டுங்க.. உதயநிதிக்கு நேரடி சவால் விடுத்த ஆதவ் அர்ஜுனா..!!

இன்னும் 8 மாதத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் 25 மேயர்களில் 1 மேயர் பதவியையாவது தில் இருந்தால் ஜெயித்துக்…

17 minutes ago

“இதென்ன கருப்பு பணமா..?” வெளிப்படையா தெரியப்படுத்துங்க… தனியார் பள்ளி கட்டண விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.. மகிழ்ச்சியில் பெற்றோர்கள்..!!

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்ற தனியார் பள்ளி இயக்குநரின் உத்தரவுக்கு தடை விதிக்க…

21 minutes ago

குஷியோ குஷி..! இனி பள்ளிக்கு லேட்டாக வந்தால்… பள்ளி மாணவர்களுக்கு இரவில் வந்த ஹேப்பி நியூஸ்..!!

பள்ளிக்குத் தாமதமாக வரும் மாணவர்களைத் தண்டிக்கக் கூடாது என்று தனியார் பள்ளி இயக்குநர் சுகன்யா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவ்வாறு…

24 minutes ago

டாஸ்மாக் மதுபாட்டில்களுக்கு டெபாசிட் தொகை ரூ.10.. அமைச்சர் விக்னேஷ் போட்ட அதிரடி உத்தரவு… ஆடிப்போன டாஸ்மாக் ஊழியர்கள்..!!

டாஸ்மாக் மதுபாட்டில்களுக்கு டெபாசிட் தொகையாக ₹10 மட்டுமே வாங்க வேண்டும் என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்…

27 minutes ago