நடிகர் ஹரிஷ் கல்யாணின் வருங்கால மனைவியை பாத்துருக்கீங்களா…என்னது அவுங்க இந்த வேலை தான் பாக்குறாங்களா…

By Begam on ஐப்பசி 6, 2022

Spread the love

நடிகர் ஹரிஷ் கல்யாணின் வருங்கால மனைவி மற்றும் காதலியான நர்மதா உதயகுமார் பற்றிய தகவல்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். இதனை தொடர்ந்து அவர் பியார் பிரேமா காதல், தாராள பிரபு, கசடதபற, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஓமணப்பெண்ணே போன்ற படங்களில் நடித்துள்ளார்.

   

   

நடிகை ப்ரியா பவானி சங்கருடன் இவர் நடித்த  ‘ஓ மன பெண்ணே’ திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தின் போது இவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. இணையங்களில் வெளியான பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் தன்னுடைய காதலியுடன் கை கோர்த்தவாறு இருக்கும் புகைப்படத்தை தற்பொழுது பகிர்ந்துள்ளார்.

 

தற்சமயம் அவரின் காதலியின் பெயர் நர்மதா உதயகுமார் என்று மட்டும்  குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாணின் வருங்கால மனைவி மற்றும் காதலியான நர்மதா உதயகுமார் பற்றிய தகவல்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. நர்மதா, ஐடி கம்பெனியின் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் திருமண தேதியும் வெளியிடப்படலாம்.