அதிமுகவில் நீடிப்பதா அல்லது மாற்றுக்கட்சியில் இணைவதா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு வெளியே வந்த அவரிடம், “நீங்கள் இன்னும் அதிமுகவில் தான் இருக்கிறீர்களா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு சற்றும் எதிர்பாராத விதமாக, “நான் அதிமுகவில் இருக்கிறேனா, இல்லையா என்பது எனக்கே தெரியாது; இதற்கு எடப்பாடி பழனிசாமி தான் பதில் சொல்ல வேண்டும்” என அதிரடியாகக் கூறிவிட்டு அவர் வேகமாகத் தனது காரில் புறப்பட்டுச் சென்றார். சி.வி. சண்முகத்தின் இந்த ஓப்பனான பேச்சும், கட்சித் தலைமை மீதான அதிருப்தியும் அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளதோடு, அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற விவாதத்தையும் பலமாக்கியுள்ளது.
