தமிழகம் முழுவதும் இ-சேவை & பொது சேவை மையங்களில் இனி… அரசு அதிரடி உத்தரவு…!

By Swetha on ஆடி 4, 2026

Spread the love

தமிழ்நாடு முழுவதும் உள்ள இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களில் அதிரடி ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஜாதி, வருமானம், இருப்பிடம், வாரிசு, கல்விச் சான்றிதழ்கள், கைம்பெண் சான்று மற்றும் புதிய ரேஷன் அட்டை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சான்றிதழ்கள் இந்த மையங்கள் மூலமாகவே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த சேவைகள் அனைத்தும் எவ்வித தாமதமுமின்றி பொதுமக்களுக்கு விரைவாகக் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கிலேயே இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மூலம் பொதுமக்கள் சான்றிதழ்கள் கோரி விண்ணப்பிக்கும் போது ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படும் என்றும், முறைகேடுகள் ஏதேனும் இருந்தால் அவை களையப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதன் மூலம், அரசு வழங்கும் டிஜிட்டல் சேவைகள் தடையின்றி, மிக எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் அடித்தட்டு மக்களைச் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.