#image_title
சினிமா உலகைப் பொருத்தவரை தங்களுடன் இணைந்து நடிக்கும் நடிகர்களும், நடிகைகளும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கம்தான். இது வெள்ளித்திரை, சின்னத்திரை என்று இரண்டிலும் சகஜமாக நடைபெற்று வருகிறது. நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் பார்த்திபன் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களைப்போல எண்ணற்ற ஜோடிகள் தங்களுடன் இணைந்து நடித்தவர்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களில் பலர் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் ஒரு சிலர் நட்சத்திர தம்பதிகளாக ரசிகர்கள் மத்தியில் வலம் வந்து கொண்டுள்ளனர். தற்பொழுதுதான் இப்படி நடிகை, நடிகர்கள் தங்களுக்குள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்களா? என்று பார்த்தால் இல்லை. திரையுலகின் ஆரம்ப காலத்திலேயே இது நடைபெற்றுள்ளது. அப்படி முதன்முதலாக தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர், நடிகை யார் தெரியுமா?. அவர்கள் இவேறு யாரும் இல்லை. நடிகர் பி. யூ. சின்னப்பா மற்றும் நடிகை சகுந்தலா இருவரும் தான்.
தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் ,பாடகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் பி. யூ. சின்னப்பா. பி.யு.சின்னப்பா – ஏ.சகுந்தலா காதல் குறித்து அறிந்திருந்த டைரக்டர் டி.ஆர். சுந்தரம், பி.யு. சின்னப்பாவை அழைத்து உடனே சகுந்தலாவை திருமணம் செய்து கொள்ள கூறினார். நடிகை சகுந்தலாவின் தாய் எதிர்ப்பையும் மீறி அவரை 1943ஆம் ஆண்டு சேலத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார் பி.யு.சின்னப்பா. இவர்களுக்கு ராஜ் பகதூர் எனும் ஒரு மகனும் உள்ளார். இவர்கள் இருவரும் தான் தமிழ் சினிமாவில் முதன் முதலில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர், நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…