அட காமெடி நடிகர் தாமுவின் மகள்கள் இவர்கள்தானா… இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களே… வைரலாகும் குடும்ப புகைப்படம்….

By Begam on புரட்டாதி 10, 2022

Spread the love

இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கிய ‘வானமே எல்லை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் தாமு., ஆனால் இவர் விஜய் உடன் இணைந்து நடித்த ‘கில்லி’ திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்தார். விக்ரம், அஜித், விஜய் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

   

நடிகர்  தாமு நடிப்பில் மட்டுமல்லாது பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார். குறிப்பாக கல்வித் துறையில் இவர் பல சேவைகளை செய்து வருகிறார். இவர் நடிகராக செயல்பட்ட போது ‘மாணவர் சமுதாயத்திற்காக நேரம் ஒதுக்க வேண்டும்’ என்று அப்துல் கலாம் இவரிடம் கூறியிருந்தார்.

   

அதற்கு ஏற்ப இவர் கல்வி சேவை செய்து வருகிறார். கல்வித்துறையில் இவர் ஆற்றிய சேவைக்கு பாராட்டு தெரிவித்து, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் தேசிய கல்வியாளருக்கான கௌரவ விருதான’ ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021′ என்ற விருதை அளித்துள்ளது.

 

குறிப்பாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு உதவியாளராக இவர் செயல்பட்டுள்ளார். தற்பொழுது நடிகர் தாமு தன் மகள் மற்றும் மனைவியுடன் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்கள் பார்வைக்காக….