Connect with us

Tamizhanmedia.net

‘குக் வித் கோமாளி’ புகழ் கண்ணீர் சிந்திய தருணம்… யாருக்காக?… எதற்காக?… பரபரப்பில் ரசிகர்கள்…

CINEMA

‘குக் வித் கோமாளி’ புகழ் கண்ணீர் சிந்திய தருணம்… யாருக்காக?… எதற்காக?… பரபரப்பில் ரசிகர்கள்…

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சி ஆனகுக் வித் கோமாளியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ‘புகழ்’. தற்பொழுது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு கால் பதித்துள்ளார். புகழின் நடிப்பில் சபாபதி, என்ன சொல்லப் போகிறாய், அஜித்துடன் ‘வலிமை’, சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’ படங்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.

காசேதான் கடவுளடா, யானை, ஏஜென்ட் கண்ணாயிரம் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இவர் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இவர் தனது நீண்ட நாள் காதலியான பென்சியாவை திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தார்கள் நண்பர்கள் கூடி இத்திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு புகழ் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார்.

அதில் மறைந்த வடிவேலு பாலாஜியிடம்  சென்று ஆசீர்வாதம் வாங்குவது போல அப்பதிவு இருந்தது. அவருக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவர்தான் தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்றும் பதிவில் குறிப்பிட்டிருந்தார். தற்பொழுது புகழ் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்’ நீ எங்களுடன் இல்லாமல் இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. இப்போது நீ இல்லை என்று நினைக்க முடியவில்லை. எப்பவுமே எங்களுடன் இருப்பது போலவே இருக்கிறது மாமா. என் வாழ்க்கைக்கு வழிகாட்டிய நீ  என்னுடைய  முக்கிய தருணங்களில் இல்லாமல் போய்விட்டாயே, இதை எழுதும்போதே என் கண்கள் கலங்குகிறது. மிஸ் யூ மாமா’ என்று  கூறியுள்ளார். இப்பதிவானது தற்பொழுது ரசிகர்களால் இணையதளத்தில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.

More in CINEMA

To Top