இந்த சீரியல் நடிகர் தான் நடிகை லட்சுமியின் முன்னாள் கணவரா…. நடிகை லட்சுமியின் வாழ்க்கையில் நடந்த சோகம்…

By Begam

Published on:

கடந்த 1985 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘சம்சாரம் அது மின்சாரம்’. இந்த படத்தில் அடக்கமான மருமகளாக  நடித்து பெரும் புகழ் பெற்றவர் நடிகை லட்சுமி. இந்த படத்திற்கு முன்னர் பல நூறு படங்களில் அவர் நடித்திருந்தாலும் அவருக்கென தனி ஒரு அடையாளத்தை கொடுத்து, பெரிய பிரபலத்தையும் கொடுத்தது இப்படம்.

   

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் 1977-இல்  ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஜெயகாந்தன் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டது.

லட்சுமி பல எண்ணற்ற விருதுகளுக்கு சொந்தக்காரர். எண்ணற்ற விருதுகளை வென்ற போதிலும் இவரது வாழ்க்கை மிகவும் சோகமானதாகவே அமைந்தது. தனது 19 வயதில் 1969 ல் கேரளாவை சேர்ந்த இன்சூரன்ஸ் கம்பெனியை சேர்ந்த பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா. பின்னர் 1974 இல் விவாகரத்து பெற்ற லட்சுமி 1985ல் மோகன் சர்மா என்ற நடிகரை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். வெள்ளித்திரையில் மட்டுமின்றி இவர் தற்பொழுது சின்னத்திரையிலும் நடித்துக் கொண்டு வருகிறார்.கோலங்கள் தாலாட்டு போன்ற சீரியல்களில் நடித்துக்  கொண்டுள்ளார். அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரையும் விவாகரத்து செய்து விட்டார்.

பின்னர் ‘என்னுயிர் கண்ணம்மா’ படத்தில் நடிக்கும் போது இந்த படத்தின் இயக்குனர் சிவா சந்திரன் உடன் பழக்கம் ஏற்பட்டு பழக்கம் ஏற்பட்டது அந்தப் பழக்கம் காதலாக மாறி திருமண பந்தத்தில் முடிந்தது. இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. 67 வயதான லட்சுமி இவருடன் மன நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளார்.