டிராபிக் போலீஸ் கிட்ட இருந்து தப்பிக்க இதோ ஒரு சீக்ரெட் டிப்ஸ்… வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… இதோ அதிரடி தகவல்..!!!

Spread the love

இந்தியாவில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கும் அதிகாரம் அனைத்து காவலர்களுக்கும் கிடையாது என்பதை வாகன ஓட்டிகள் புரிந்துகொள்வது அவசியமாகும். மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, உதவி ஆய்வாளர் அல்லது அதற்கு மேலான பதவியில் இருக்கும் அதிகாரிகளே நேரடியாக அபராதம் விதிக்க முடியும். சாலையில் பணியில் இருக்கும் சாதாரண காவலர்கள் அல்லது தலைமை காவலர்கள் உங்கள் வாகனத்தை நிறுத்தி ஆவணங்களைச் சரிபார்க்கலாமே தவிர, அவர்கள் நேரடியாக சலான் வழங்க சட்டப்படி அதிகாரம் இல்லை.

மேலும் அவ்வாறு அபராதம் விதிக்க வேண்டுமானால், அவர்களுடன் உயர் அதிகாரி ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், காவலர்கள் உங்கள் வாகனத்தின் சாவியை வலுக்கட்டாயமாகப் பறிக்கக் கூடாது என்பதும் முக்கியமான சட்ட உரிமையாகும். காவலர்களின் பதவியை அவர்களின் சீருடையில் உள்ள நட்சத்திரங்களைக் கொண்டே எளிதாக அடையாளம் காணலாம். சீருடையின் தோள்பட்டையில் நட்சத்திரங்கள் ஏதும் இல்லை என்றால் அவர் ஒரு காவலர் அவருக்கு அபராதம் விதிக்க அதிகாரம் இல்லை.

ஒரு நட்சத்திரம் இருந்தால் அவர் உதவி ஆய்வாளர் இரண்டு நட்சத்திரங்கள் இருந்தால் துணை ஆய்வாளர், மற்றும் மூன்று நட்சத்திரங்கள் இருந்தால் அவர் ஆய்வாளர் ஆவார். இந்த மூன்று நிலைகளில் உள்ள அதிகாரிகளுக்கும் விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்கும் முழு உரிமை உண்டு. ஒருவேளை தகுதியற்ற காவலர் உங்களிடம் அபராதம் கேட்டு வற்புறுத்தினாலோ அல்லது தவறாக நடந்துகொண்டாலோ, அவர்களின் பெயர் மற்றும் பதவியைக் குறித்துக்கொண்டு உயர் அதிகாரிகளிடமோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ புகார் அளிக்க வாகன ஓட்டிகளுக்கு உரிமை உள்ளது.

Rajeshwari

Recent Posts

அடுத்த பரபரப்பு..! தவெகவுக்கு ஆதரவு இல்லை… அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி..!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) அளித்த புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வழங்கிய ஆதரவு கடிதங்கள்…

2 minutes ago

BREAKING: விஜய்க்கு ஆதரவா? இல்லையா?.. இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கிறார் திருமா..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எட்ட, காங்கிரஸ் மற்றும்…

8 minutes ago

“ஆட்சி கவிழ வாய்ப்பு” பதவியேற்பு கனவில் மண்ணள்ளிப் போட்ட மாரிதாஸ்.. கலக்கத்தில் தவெக..!!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) எச்சரிக்கை விடுத்துள்ள யூடியூப்பர் மாரிதாஸ், தனது எக்ஸ் (X) தளத்தில் தற்போதைய அரசியல் சூழல்…

11 minutes ago

கம்யூனிஸ்ட் ஆதரவு கொடுத்ததற்கு காரணமே வெங்கடேசன் தான்.. விஜய்யுடன் இருக்கும் அந்த நட்பு.. வெளியான தகவல்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு, சிபிஎம் (CPM) மற்றும் சிபிஐ (CPI)…

31 minutes ago

இன்றைய தங்கம் விலை இதுதான்..! ஒரு சவரன் ரூ.1,13,200.. நகைப்பிரியர்களுக்கு காத்திருந்த டிவிஸ்ட்..!!

இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று…

53 minutes ago

“இதெல்லாம் ரொம்ப ஓவர்” பாதுகாப்பு வலையைச் சோதிக்க உயிரைப் பணையம் வைத்த நபர்..! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், 28-வது மாடியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் 'குழந்தைகள் பாதுகாப்பு…

59 minutes ago