லோன் வாங்கியவர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்… இனி ஒரு பைசா கூட மிரட்ட முடியாது… கடன் தொல்லையால் இனி யாரும் கண்ணீர் விட வேண்டாம்.. அரசு போட்ட அதிரடி தடை..!!

Spread the love

தமிழ்நாட்டில் கடன் வழங்கும் நிறுவனங்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தவும், குறிப்பாகப் பெண்கள் மற்றும் விவசாயிகளைத் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்கவும் ‘தமிழ்நாடு பணம் கடன் வழங்கும் நிறுவனங்கள் கட்டாய வசூல் நடவடிக்கைகளைத் தடுக்கும் சட்டம் மற்றும் விதிகள் 2025’ ஆகியவற்றைத் தமிழ்நாடு அரசு அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.

மேலும் இப்புதிய விதிகளின்படி, மாநிலத்தில் இயங்கும் நுண் நிதியியல் நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்கும் முகமைகள் அனைத்தும் அரசு இணையதளத்தில்முறையாகப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாமல் கடன் வணிகத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் என்பதோடு, இதற்கான பதிவுச் சான்றிதழ் மூன்றாண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடன் வசூலிக்கும் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், கடனாளிகளுக்கு எவ்விதமான மிரட்டலோ அல்லது வற்புறுத்தலோ அளிக்கக் கூடாது என்பதையும் இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. கடன் பெற்றவர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினருக்குத் தொல்லை கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் மட்டுமே கடன் பெற வேண்டும் என்றும், கடன் வழங்கும் நிறுவனங்கள் விதிமீறல்களில் ஈடுபட்டால் மாவட்ட நிர்வாகம் அல்லது காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுண் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதன் மூலம் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Rajeshwari

Recent Posts

இன்றைய தங்கம் விலை இதுதான்..! ஒரு சவரன் ரூ.1,13,200.. நகைப்பிரியர்களுக்கு காத்திருந்த டிவிஸ்ட்..!!

இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று…

2 minutes ago

“இதெல்லாம் ரொம்ப ஓவர்” பாதுகாப்பு வலையைச் சோதிக்க உயிரைப் பணையம் வைத்த நபர்..! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், 28-வது மாடியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் 'குழந்தைகள் பாதுகாப்பு…

8 minutes ago

“பதவியிலேயே அமரல அதற்குள்ள பித்தலாட்டமா..?” விஜய்யை சீண்டும் திமுக எம்.பி… தமிழக அரசியலில் அனல் பறக்கும் மோதல்..!!

தமிழக அரசியலில் 'மாற்றம்' கொண்டு வருவோம் என்று தமிழக வெற்றிக்கழகம் சொன்னதன் நிஜமான அர்த்தம் இப்போதுதான் புரிகிறது என திமுக…

12 minutes ago

“நாங்க ஒன்னும் வெண்ணெய் கிடையாது” ஒரே ஒரு எம்.எல்.ஏ… அவ்வளவுதானா தம்பி? இதையெல்லாம் நாங்க பார்த்தாச்சு… டிடிவி தினகரன் காட்டம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.…

16 minutes ago

“மன உளைச்சலா இருக்கு” தூக்கமே வர மாட்டேங்குது… விஜய் வீட்டு வாசலில் கதறி அழுத கர்ப்பிணி பெண்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த…

25 minutes ago

“அந்த ஒரு பதிவு” தவெக கூட்டணியை உறுதி செய்தது விசிக…? தமிழக அரசியலில் பரபரப்பு…!!

விசிக (VCK) கட்சியின் தலைவர் திருமாவளவன் அக்கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த வன்னி…

37 minutes ago