என் வாழ்க்கையில் ஒரு சிறந்த நண்பன்.. வாழ்த்துக்கள் தங்கமே.. 14வது திருமண நாளை முன்னிட்டு உருக்கமான பதிவு போட்ட அறந்தாங்கி நிஷா..!

By Nanthini on ஐப்பசி 11, 2024

Spread the love

அறந்தாங்கி நிஷா கடந்த 2015-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.  அதன்பிறகு நிஷாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு ரிலீசான மாரி 2 திரைப்படத்தில் அட்டு ஆனந்தி கதாபாத்திரத்தில் அறந்தாங்கி நிஷா நடித்துள்ளார்.

   

இதனை தொடர்ந்து இரும்புத்திரை, கோலமாவு கோகிலா, சீமராஜா, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் அறந்தாங்கி நிஷா நடித்துள்ளார்.இது மட்டும் இல்லாமல் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 1, குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை அறந்தாங்கி நிஷா தொகுத்து வழங்கியுள்ளார்.

   

 

பிக் பாஸ் சீசன் 4 அறந்தாங்கி நிஷா போட்டியாளராக பங்கேற்று 70 நாள் அங்கேயே இருந்தார். இவரது நகைச்சுவைக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் அறந்தாங்கி நிஷா தனது 14 வது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.

இது தொடர்பாக கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ஒரு பதிவை அவர் போட்டுள்ளார். அதில், உங்களோடு என் வாழ்க்கை ஆரம்பித்து 13 வருடம் முடிந்து 14 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறேன். என்னால் நம்பவே முடியல.

சின்ன புள்ளையிலிருந்து பார்த்த முகம்தான். இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட இஷ்டத்துக்கு எல்லாம் இருக்க முடியுமான ரொம்ப பயந்தேன். இப்போ வரைக்கும் என்னோட கனவை உங்க கனவா பார்த்துட்டு இருக்கீங்க. எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தீங்க. வாழ்க்கையில் ஒரு சிறந்த நண்பனா எப்பவும் என் கூட இருக்கீங்க. வாழ்த்துக்கள் தங்கமே, இன்னும் பல ஆண்டுகள் உங்களோடு சிறந்த தோழியா மனைவியா பயணிச்சிட்டு இருப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.