நயன்தாராவின் நடிப்பைக் குறை சொன்ன தனுஷ்… விருது வாங்கிய பின் மேடையில் வைத்து குத்திக் காட்டிய நயன்தாரா!

By vinoth on அக்டோபர் 11, 2024

Spread the love

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. 20 வருடங்களாக தொடர்ந்து சினிமாவில் இருந்து வரும் இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நயன்தாராவின் சினிமா கேரியரை இரண்டாகப் பிரிக்கலாம். சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகியோருடனான காதலுக்குப் பிறகு சினிமா வேண்டாம் என மும்பையில் தங்கியிருந்த அவருக்கு ராஜா ராணி படம் கம்பேக்காக அமைந்தது. அதன் பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்த அவர் மாயா மற்றும் அறம் ஆகிய படங்களின் மூலம் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டு லேடி சூப்பர் ஸ்டார் ஆனார்.

   

#image_title

   

சில ஆண்டுகளுக்கு முன்னர்  இயக்குனர் விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். நயன்தாரா படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல் குழந்தைகளை கவனித்து கொள்வதிலும் நயன்தாரா எந்த குறையும் வைக்கவில்லை. மேலும் தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து நயன்தாரா தயாரிப்பு, பிசினஸ் என எப்போதும் பிஸியாகவே இருக்கிறார். ஏற்கனவே நடிகர் சங்கத்துக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் மோதல் போக்கு இருக்கிறது.

 

நயன்தாரா விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர்ந்தது நானும் ரௌடிதான் பட ஷூட்டிங்கின்போதுதான். அந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ். அந்த படத்தில் நயன்தாரா காது கேளாத பெண்ணாக நடித்திருந்தார். ஆனால் அவரின் நடிப்பு தனுஷுக்குப் பிடிக்கவேயில்லையாம். அதை நேரடியாகவே தஞுஷ் நயன்தாராவிடம் கூறியுள்ளார்.

#image_title

இந்நிலையில்தான் படம் ரிலீஸாகி நயன்தாராவுக்கு அந்த படத்துக்காக விருது ஒன்று வழங்கப்பட்டது. அதைப் பெற்ற அவர் “இந்த விருதை என் தயாரிப்பாளரான தனுஷுக்கு நான் சமர்ப்பிக்கிறேன். ஏனென்றால் அவருக்கு இந்த படத்தில் என்னுடைய நடிப்பு சுத்தமாக பிடிக்கவில்லை” எனப் பேசி தனுஷை கேலி செய்தார்.