CINEMA
ஃப்ரண்டா பழகுறாங்கன்னு நினைச்சேன்.. அது ரொம்ப கஷ்டமா இருக்கும்.. ஓப்பனாக பேசிய இசைப்புயல் AR ரஹ்மானின் மகள்..!!
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் மகள் கத்தீஜா மின்மினி துறை படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். முதல் படத்திலேயே அவரது இசைக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் கத்தீஜா தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் கத்தீஜா பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நிகழ்ச்சி தொகுப்பாளர் ரகுமான் சாரின் மகள் என்பதற்காகவே உங்களிடம் வந்து பேசுவார்களே அதை எப்படி சமாளித்தீர்கள். அதை எப்படி அடையாளம் கண்டுபிடிப்பீர்கள்.
உங்களிடம் வந்து பேசுபவர்களையும், கதீஜாவுக்காக வந்து பேசுபவர்களையும் எப்படி கண்டுபிடிப்பீர்கள் என கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த கத்தீஜா அது இப்போது வரை எனக்கு சந்தேகமாக தான் உள்ளது. பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து எனக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. நான் பள்ளியில் படித்தபோது வட இந்தியாவை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரு குரூப்பாக இருப்பார்கள். தமிழ்நாட்டில் சேர்ந்தவர்கள் ஒரு குரூப்பாக இருப்போம். அவர்கள் திடீரென வந்து என்னிடம் பேசுவார்கள். ஆனால் நான் அவர்கள் டைப் ஆக இருக்கவே மாட்டேன்.
நான் பள்ளியில் படித்த காலங்களில் இரட்டை ஜடை போட்டு சாக்ஸை மேலே எழுத்து போட்டுக் கொண்டு இருப்பேன். என்னிடம் அவர்கள் வந்து பேசுவார்கள். எனக்கு தெரியும் நான் அவர்கள் டைப் இல்லை. ஆனால் ரஹ்மான் மகள் என்பதற்காகவே வந்து என்னிடம் பேசுவார்கள். அதுபோல பலமுறை நடந்துள்ளது. இப்போது மின்மினி திரைப்படம் வெளியான போது முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரோகிணி தியேட்டருக்கு சென்றிருந்தேன்.
அப்போது என்னிடம் வந்து பேசியவர்கள் எல்லாம் முழுக்க முழுக்க கத்தீஜாவிற்காக வந்து பேசியவர்கள். அங்கு வந்தவர்களை நான் புரிந்து கொண்டேன் அவர்கள் கத்தீஜாவிற்காக தான் வந்துள்ளார்கள் என்பதை. இப்படிப்பட்ட சமயங்களில் தான் எனக்காக வந்து பேசுகிறார்களா என்பதை நான் புரிந்து கொண்டேன். அதுமட்டுமில்லாமல் ஏதாவது காரியம் நடக்க வேண்டும் என்பதற்காகவே சிலர் வந்து என்னிடம் நண்பர்கள் போல பழகி பேசுவார்கள். ஆரம்பத்தில் நண்பர்கள் போல பழகிவிட்டு அவர்களது காரியம் ஆனதும் எங்கு செல்வார்கள் என்று தெரியாது. அது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் என பேசி உள்ளார்.