Connect with us

நான் ஜோக்கர் போல நின்றேன்… அப்போதுதான் அந்த வேடம் எனக்குக் கைகொடுத்தது – சிவகுமார் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

CINEMA

நான் ஜோக்கர் போல நின்றேன்… அப்போதுதான் அந்த வேடம் எனக்குக் கைகொடுத்தது – சிவகுமார் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர்  சிவகுமார். இவரின் இயற்பெயர் பழனிச்சாமி. சிவகுமார் கோவையில் பிறந்து வளர்ந்தவர்.  சென்னை ஓவியக் கல்லூரியில் படித்த் இவர் அதன் பின்னர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். படிப்படியாக வளர்ந்து கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்த சிவகுமார் 100 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சிவகுமார் 1965 ஆம் ஆண்டு காக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அடுத்ததாக சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் நடித்தார். இவரது இளம் வயது தோற்றம் மற்றும் முகம் அப்படியே முருகப்பெருமானின் கதாபாத்திரத்திற்கு வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியது. அதனால் 1967ஆம் ஆண்டு கந்தன் கருணை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவினார் சிவகுமார்.

   

அன்று முதல் தமிழ் சினிமாவில் கடவுள் வேடம் என்றால் அது சிவகுமார்தான் என்ற அளவுக்கு அவருக்கு அந்த வேடம் கச்சிதமாக பொருந்தியது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் “எனக்கு கடவுள் கிடைத்ததே ஒரு சுவாரஸ்யமான தகவல். நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது ஏவிஎம் ராஜன், ரவிச்சந்திரன், ஸ்ரீதர் எல்லாம் அழகாக அவர்களுக்கு ஏற்ற வேடங்களைப் பெற்றார்கள். ஆனால் நான் மட்டும்தான் ஜோக்கராக இருந்தேன்.

   

என்னை ஸ்கூல் பையனாகவும் போட முடியவில்லை. காலேஜ் பையனாகவும் போட முடியவில்லை. அப்போதுதான் எனக்குக் கடவுள் வேடம் வந்தது. அது அப்படியே பொருந்தியது. அதன் பிறகு எந்த கடவுள் வேடம் என்றாலும் நான்தான். ஏன் என்றால் எனக்குதான் கண்ணுக்குக் கீழ சதை தொங்காது. தொப்பை இருக்காது. வலுவான ஒரு கடவுள் லுக்குக்கு நான் பொருந்தினேன்.

 

அப்போதுதான் இயக்குனர் ஏ பி நாகராஜன் என்னிடம் சொன்னார். இன்னும் 25 வருடத்துக்குக் கடவுள் வேடம் என்றால் அது சிவகுமார்தான் என்றார்.” எனப் பேசியுள்ளார்.

 

 

More in CINEMA

To Top