நடிகை காந்திமதி இறக்கும் போது இவ்ளோ கஷ்டமா…? யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது…

By Meena on ஆகஸ்ட் 30, 2024

Spread the love

காந்திமதி மானாமதுரையில் பிறந்து வளர்ந்தவர். சிறு வயது முதலே நாடகங்களில் நடிக்க தொடங்கிய காந்திமதி தனது பதினோராவது வயதில் சினிமாவில் நுழைந்தார். தனது வாழ்நாளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் காந்திமதி.

   

பதினாறு வயதினிலே திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் அம்மாவாக நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் காந்திமதி. பின்னர் மண்வாசனை, முத்து, கரகாட்டக்காரன் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் காந்திமதி. எம் ஜி ஆர், ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, விஜய், ரேவதி, ராதா, அம்பிகா, ராதிகா போன்ற அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் அம்மாவாகவும் பாட்டியாகவும் நடித்தவர் காந்திமதி.

   

சினிமாவில் காந்திமதி ஆற்றிய பங்காளிப்பிற்காக அவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. வாயில் வெத்தலை போட்டுக்கொண்டு இவர் நக்கலாக பழமொழிகளை கூறி பேசும் பாங்கினால் மக்களை எளிதாக சிரிக்க வைத்து விடுவார். அதற்காகவே ரசிகர் பட்டாளமும் உண்டு. அப்படி நடிப்பின் மீது அதீத ஆர்வம் கொண்ட காந்திமதி திருமண வயதை அடைந்த போதும் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் அவர் திருமணம் செய்யாமல் நடிப்பில் கவனம் செலுத்தினார்,

 

ஒரு கட்டத்திற்கு மேல் வயது அதிகமாகவே அவரால் திருமணம் செய்ய இயலவில்லை. திருமணம் செய்யாமல் இருந்த காந்திமதி வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். இறக்கும் தருவாயில் தண்ணீர் கொடுக்க கூட ஆள் இல்லாமல் தனிமையிலே நொந்து இறந்துள்ளார் நடிகை காந்திமதி.