CINEMA
கர்ப்பிணின்னு கூட பார்க்கல.. வயிற்றில் எட்டி உதைத்தார்.. நடிகர் முகேஷின் உண்மை முகத்தை வெட்ட வெளிச்சமாக்கிய மனைவி சரிதா..!!
கேரளா சினிமாவில் நடிகைகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது. மலையாள சினிமா துறையில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தார்களுக்கு ஆளாகியுள்ளனர். நடிகைகளை கட்டாயப்படுத்தி பாலியல் சீண்டலுக்கு உட்படுத்துகின்றனர். அப்படி இல்லை என்றால் மிரட்டுகின்றனர் ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அந்த அறிக்கை வெளியானதில் இருந்து பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. நடிகர் முகேஷ் மீது நடிகை மினு முனீர் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இவர் சுந்தர்.சியின் ஐந்தாம் படை என்ற படத்தில் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் இவர் 80ஸ் காலகட்டத்தில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடந்த 1988 ஆம் ஆண்டு பிரபல நடிகையான சரிதாவும் முகேஷ் திருமணம் செய்து கொண்டனர் சுமார் 23 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் பிரிந்து விட்டனர் முகேஷ் மீதான பாலில் குற்றச்சாட்டு பரபரப்பாக பேசப்படும் நிலையில் நடிகை சரிதா அளித்த பழைய பேட்டியும் அதிகமாக பகிரப்படுகிறது அந்த பேட்டியில் சரிதான் கூறியதாவது முகேஷ் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார் சினிமாவில் பெண்களை கொடுமைப்படுத்தும் காட்சிகளை நான் பார்த்திருக்கிறேன் ஆனால் நிஜத்தில் எனக்கு நடக்கும் என கனவில் கூட நினைக்கவில்லை நான் கர்ப்பமாக இருந்த சமயத்தில் ஓணம் பண்டிகை வந்தது பண்டிகை சமயத்தில் கூட முகேஷ் என்னுடன் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்.
கர்ப்பிணி என்று கூட பாராமல் என் வயிற்றிலேயே எட்டி உதைத்து விட்டார். நான் வழியால் கீழே விழுந்து அழுதபோது நீ தான் நல்ல நடிகையாச்சே நல்ல நடிக்கிறாய் என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். நான் 9 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது இரவு உணவுக்காக இரண்டு பேரும் வெளியே செல்ல திட்டமிட்டோம். வீட்டிலிருந்து வெளியே வந்த என்னை அவர் காருக்குள் ஏற விடவே இல்லை. என்னை வெறுப்பேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு காரை முன்னும் பின்னமாக நகர்த்தினார். ஒரு கட்டத்தில் நான் அழுது கொண்டே இருந்தேன். மறுநாள் இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு தாமதமாக வந்தார்.
அதற்கான காரணத்தைக் கேட்டபோது என் தலை முடியை பிடித்து தரையில் தள்ளிவிட்டு அடித்தார். அவரது கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். இந்த கொடுமைகளை எனது குழந்தைகள் பார்க்க கூடாது என்பதற்காக தான் அவர்களை பர்டிங் ஸ்கூலில் படிக்க வைத்தேன். முகேஷ் எனக்கு செய்த கொடுமைகள் அனைத்தும் அவரது தந்தைக்கு தெரியும். அவர் என்னை சந்தித்து முகேஷ் நடவடிக்கை சரியில்லை என கூறிய என்னிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் இது பற்றி வெளியே தெரிய வேண்டாம் என கேட்டுக்கொண்டு என்னிடம் சத்தியம் வாங்கி விட்டார். இப்போது அவர் உயிருடன் இல்லை. அதனால்தான் இந்த விஷயத்தை வெளிப்படையாக கூறுகிறேன் என சரிதா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.