“பட வாய்ப்பு இல்லாமல் போனதற்கு நான் எடுத்த முடிவு தான் காரணம்”.. பல வருடம் கழித்து மனம் திறந்த கிழக்கு சீமையிலே பேச்சி..!

By Nanthini on ஆவணி 30, 2024

Spread the love

மலையாள நடிகையான அஸ்வினி தன்னுடைய பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது மலையாள பத்திரிகைக்காக தன்னுடைய வகுப்பு தோழர்களுடன் இணைந்து மாடலிங் செய்தார். அந்த பத்திரிகையை பார்த்த இயக்குனர் பாரதிராஜா புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கினார். அந்த திரைப்படத்தில் அறிமுகமான அஸ்வினி தமிழ் ரசிகர்களுக்காக தன்னுடைய பெயரை ருத்ரா என்று மாற்றிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கு சீமையிலே படத்தில் நடித்து பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானார்.

   

குறிப்பாக இந்த படத்தில் வரும் ஆத்தங்கர மரமே அரசமர இலையே ஆலமரகிளையே பாடல் இன்றும் அனைவரது மனதிலும் இடம் பிடித்துள்ளது. கிழக்கு சீமையிலே படத்தின் வெற்றியை தொடர்ந்து அஞ்சல் பெட்டி எண் 27, துருவம், ராமன் அப்துல்லா, பொன்னுத்தாயி மற்றும் முதல் பயணம் என அடுத்தடுத்து படங்களில் நடித்தாலும் இவரால் புகழைத் தொட முடியவில்லை. தமிழ் மற்றும் மலையாளம் என பிசியாக நடித்துக் கொண்டிருந்த ருத்ரா சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சிங்கப்பூரில் செட்டில் ஆனார். தற்போது இவர் சிங்கப்பூர் தொடர் மற்றும் குறும்படங்களில் நடித்து வருகின்றார்.

   

 

இந்த நிலையில் ருத்ரா சமீபத்தில் அடித்த பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், 1992 மற்றும் 93 ஆகிய காலகட்டத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் அதிக பட வாய்ப்புகள் கிடைத்தன. இரண்டிலுமே படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் முக்கியமான கதைகளை தேர்வு செய்து நடிக்கலாம் என்று முடிவு செய்து சில படங்களில் மட்டுமே கமிட்டானேன். இதனால் நிறைய படங்களை வேண்டாம் என்று உதறினேன். ஒரு கட்டத்தில் எந்த ஒரு பட வாய்ப்புகளும் இல்லாமல் சென்று விட்டது. இதனால் 1996 ஆம் ஆண்டிலிருந்து சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன்.

பிறகு 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து சிங்கப்பூரில் செட்டில் ஆனேன். சிங்கப்பூரில் இருந்தாலும் நடிப்பை விடாமல் தொடர்ந்து குறும்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அது மட்டுமல்லாமல் பள்ளியில் ஆசிரியராகவும் நடன பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளேன். தற்போது மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். இதற்கு எனது கணவரும் என் மகளும் உறுதுணையாக இருக்கின்றனர் என மனம் திறந்து பேசியுள்ளார்.