பிரபுதேவா- AR ரகுமான் காம்போவில் உருவாகும் ‘MOONWALK ‘ என்ற திரைப்படம்.. இந்த பிரபல யுடியூப் சேனல் தான் படத்தோட தயாரிப்பாளரா..?

By Mahalakshmi on ஆனி 19, 2024

Spread the love

25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு தேவாவும் ஏ ஆர் ரகுமானும் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள். இந்த படத்திற்கு முன் வாக் என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நடன புயல் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் பிரபுதேவா. அது மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற பெயராலும் புகழப்படுபவர். இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாகவும், நடன அமைப்பாளராகவும் அசத்தியிருக்கின்றார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

   

   

சமீப காலமாக தமிழில் பெரிய அளவு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த பிரபுதேவா விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இந்நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா நடிக்கும் திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கின்றார். இவர்கள் இருவரது காம்போவில் வெளியான மிஸ்டர் ரோமியோ மின்சார கனவு உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

 

இவர்கள் இணையும் ஆறாவது திரைப்படம் இது, முதன் முறையாக 1994 ஆம் ஆண்டு ஏ ஆர் ரகுமான் பிரபுதேவா கூட்டணியில் காதலன் திரைப்படம் உருவானது. இந்த திரைப்படத்தை சங்கர் இயக்கியிருப்பார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுத்ததை தொடர்ந்து லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு ஆகிய திரைப்படங்களிலும் இருவரும் சேர்ந்து பணியாற்றி இருக்கிறார்கள்,

தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த திரைப்படத்தை பிகைன்வுட்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது. மனோஜ் என் எஸ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார் . இந்த திரைப்படத்தில் யோகி பாபு, அஜு வர்கிஸ், அர்ஜூன் அசோகன், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, லொல்லுசபா சாமிநாதன், குக்வித்கோமாளி தீபா உள்ளிட்ட  பல பிரபலங்கள் நடிக்க இருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படக்குழு இதனை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு முன் வாக்கு என பெயரிடப்பட்டுள்ளது. மைக்கேல் ஜாக்சனின் நடன முறையை இந்த படத்திற்கு பெயராக வைத்துள்ளதாகவும்,  இப்படம் நடனத்தை மையமாக வைத்து உருவான திரைப்படமாக இருக்கலாம் என்றும் பலரும் கூறி வருகிறார்கள்.