17 வருஷத்துல இதான் முதல் முறை.. அந்த படத்துக்கு Backround ஸ்கோர் சூப்பரா பண்ணிருக்கான்னு AR ரஹ்மான் சார் கால் பண்ணி பாராட்டினார்..

By Ranjith Kumar

Updated on:

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் “ஜி.வி பிரகாஷ்”. இவர் தற்போது இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்டு இந்திய சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பழமொழிகளில் நடித்தும் இசையமைத்தும் கொண்டிருக்கிறார். இவர் இதுவரை பல விருதுகளை அல்லி குவித்துள்ளார்.

இன்டர்நேஷனல் அவார்ட், நேஷனல் அவார்ட் என்று பல விருதுகளை வாங்கியுள்ளார். முதல் முறையாக “வெயில்” படத்திற்காகவும் சூரரைப் போற்று படத்திற்காகவும் நேஷனல் அவார்ட் வாங்கியுள்ளார். இவர் தற்போது பல படங்களில் மிகச்சிறந்த இசையை அமைத்து வந்தாலும், 2006 ஆம் ஆண்டு வசந்த் பாலன் இயக்கத்தில் பரத், பசுபதி, பாவனா, பிரியங்கா, ப்ரியா ரெட்டி இவர்களின் நடிப்பில் வெளிவந்து பட்டி தொட்டி எல்லாம் பட்டய கிளப்பிய படம் தான் “வெயில்”. இப்படத்தில் முதல் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் ஜிவி பிரகாஷ், இதில் இவர் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவில் மிகச்சிறந்த இசையை வெளி காட்டி இருக்கிறார்.

   

இப்படத்திற்காக பல அவார்டுகளை அள்ளி குவித்து இருக்கிறார். முதல் படத்திலேயே தனது நேஷனல் அவார்டை பெற்ற ஒரு இசையமைப்பாளர் இவர் ஒருவரே ஆவார். அதன் பின்னதாக ஆயிரத்தில் ஒருவன், பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆடுகளம் போன்ற மாபெரும் படங்களில் மிகச்சிறந்த இசையை மக்களுக்கு பரிசளித்துள்ளார். அதன் பின்னதாக நடிப்பில் ஆர்வம் கொண்டு டார்லிங் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, தனக்கென்று ஒரு இடத்தை சினிமா துறையில் பிடித்துக் கொண்டு, அதன் பின்னதாக எனக்கு இன்னொரு பேர் இருக்கு, புரூஸ்லி, கடவுள் இருக்கான் குமாரு போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் தனியார் சேனல் நேர்காணலில் போது இசை புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களைப் பற்றி சில விஷயங்களை புகழ்ந்துள்ளார்.

அதாவது கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பு வெளிவந்த கேப்டன் மில்லர் படத்தில் ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைத்துள்ளார். அதைப் பார்த்த ஏ ஆர் ரகுமான் அவர்கள் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு தொடர்பு கொண்டு, இப்படத்தில் வரும் பேக்ரவுண்ட் BGM மிக சிறப்பாக இருக்கிறது, இப்படி ஒரு இசையை நான் இதுவரை பார்த்ததில்லை என்று வாழ்த்து கூறியுள்ளார். அதற்கு ஜி வி பிரகாஷ் அவர்கள் தன் வாழ்க்கையிலே இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை என்றும், இவர் முதல் முதலாக என்னை அழைத்து என் படைப்பிற்கு பாராட்டு தெரிவித்தது, இசைக் கலைஞனாக மிகவும் பெருமிதம் என்று தெரிவித்திருக்கிறார்.

author avatar
Ranjith Kumar