தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்து மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் அப்பா. இயக்குனர் சமுத்திரகனி எழுதி இயக்கி தயாரித்திருந்த திரைப்படம். இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரைத் தொடர்ந்து தம்பி ராமையா, நமோ நாராயணா, வினோதினி, விக்னேஷ், யுவலட்சுமி, நாசத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.
இப்படத்திற்கு இசையானி இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் தற்போது இருக்கும் அப்பாக்களுக்கும் மகன்களுக்கும் இடையே உள்ள உணர்வை அழகாக எடுத்துக்காட்டும் திரைப்படமாக இருந்தது. தந்தையின் முக்கியத்துவம் கடமை என்ன என்பதை தெளிவாக விளக்கம் திரைப்படமாக இப்படம் அமைந்திருந்தது.
இந்த திரைப்படத்தில் அதிகம் சிறுவயது பிள்ளைகள் நடித்திருந்தார்கள். அப்படி நடித்திருந்த நடிகர்களில் ஒருவர் தான் நாசத். இவர் மயில்வாகனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்த படத்தில் ‘இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும் டா’ என்னும் டயலாக் தற்போது வரை பேமஸ் ஆக இருக்கின்றது.
இப்படத்தை தொடர்ந்து இவர் தொண்டன், கொளஞ்சி, பிழை உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு பெரிய அளவு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது சோசியல் மீடியாவில் இவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
இதை பார்த்த பலரும் அப்பா படத்தில் வந்த பையனா இது? எப்படி வளர்ந்து விட்டார் பாருங்களேன் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அப்பா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கியிருந்த இவர் தற்போது மிகப்பெரிய பெயராக வளர்ந்திருக்கின்றார். மேலும் இந்த படத்தில் நடித்திருந்த கேப்ரில்லா தற்போது சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதை தொடர்ந்து யுவட்சுமியும் நடிகையாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram