தமிழில் ‘டிராகன்’, ‘பைசன்’ உள்ளிட்ட மெகாஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வரும் அனுபமா பரமேஸ்வரன், சமூக வலைதளங்களில் தன்மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து அளித்துள்ள அதிரடிப் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் விமர்சனங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒரு படம் நன்றாக ஓடவில்லை என்றால் அது குறித்து விமர்சனம் வருவது இயல்புதான்; அவற்றை ஆரோக்கியமான முறையில் வைத்தால் ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால், திட்டமிட்டுப் பணம் பெற்றுக்கொண்டு விமர்சிப்பவர்களுக்கு நான் ஏன் பதிலளிக்க வேண்டும்? சோஷியல் மீடியாவில் வெளியாகும் அத்தனை விமர்சனங்களுக்கும் என்னால் ரியாக்ட் செய்ய முடியாது, இது திமிர் கிடையாது” எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளார். இவரது இந்தத் துணிச்சலான பேச்சு தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் ஆதரவையும் பெற்றுள்ளது.
