“பெரிய கனவு… மொத்த சேமிப்பும் போச்சு…” மெல்போர்னில் இந்திய வம்சாவளி தம்பதியின் கனவு கஃபே தீ வைத்து எரிப்பு… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!!

By Devi Ramu on ஐப்பசி 19, 2026

Spread the love

ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது வாழ்நாள் சேமிப்பைக் கொண்டு தொடங்கிய கனவு கஃபே, சட்டவிரோத புகையிலை கடைகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தீ வைப்புத் தாக்குதலில் முற்றிலும் எரிந்து நாசமான சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெல்போர்ன் பிட்ஸ்ராய் நார்த் பகுதியில் ஆஷிஷ் சர்மா மற்றும் மணாலி புரோகித் தம்பதியினர் 100,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமான தங்களது சேமிப்பை முதலீடு செய்து ‘அண்ட் போடேகா’ என்ற சைவ கஃபேவை நடத்தி வந்தனர். கடையைத் தொடங்கிய சில மாதங்களே ஆன நிலையில், அருகில் இருந்த சட்டவிரோத புகையிலை விற்பனைக் கடை மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் தீ வைப்புத் தாக்குதலில் இவர்களது கஃபேவும் சேர்த்துத் தீக்கிரையானது.

   

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் சட்டவிரோத புகையிலை வர்த்தக மோதல்களால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் சிதைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ள இத்தம்பதி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தீவிரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.