Categories: சினிமா

விஷாலுக்கும் எனக்கும் உள்ள அந்த Relationship… நான் ரொம்ப happy… பிக்பாஸ் முடிந்ததும் உண்மையை உடைத்த அன்ஷிதா..!

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் நிகழ்ச்சி தற்போது முடிவடைந்து விட்டது. தீபக் மற்றும் மஞ்சரி எலிமினேஷன் ரசிகர்களுக்கு  மிகப்பெரிய ஷாக் கொடுத்தது. இதையெல்லாம் தாண்டி நிகழ்ச்சியின் சுவாரசியம் என்னவென்றால் புது தொகுப்பாளர் விஜய் சேதுபதி தான். இதற்கு முன்பாக கமலஹாசன் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்தார். அப்போது கமலஹாசன் நேர்மறை மற்றும் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்று வந்தார்.

அதேபோல விஜய் சேதுபதியும் பெற்றார் என்றே சொல்லலாம். இந்த சீஸனின் டைட்டில் வின்னராக முத்து குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்ற சீசன்களில் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் ஒரு சில வாரங்களிலேயே முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னர் என்பது தெரிந்து விட்டது.   இந்த நிகழ்ச்சியின் ஹைலைட் விஷால் லவ் கன்டென்ட் கொடுத்தார் என்பது தான். உள்ளே சென்ற போட்டியாளர்கள் அனைவரும் விஷால் டபுள் கேம் ஆடுகிறார் என்றும், அன்ஷிதா மற்றும் தர்ஷிகாவிடம் காதல் விளையாட்டு விளையாடி அவர்களை வெளியே அனுப்பி விட்டார் என்றும் உள்ளே சென்ற போட்டியாளர்கள் சொன்னாங்க.

குறிப்பாக சாச்சனா விஷாலை பிளே பாய் என்று கூறியதால் அவர் இரவு முழுவதும் கதறி அழுது கொண்டிருந்தார். இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அன்ஷிதா பேட்டி ஒன்றில் தொகுப்பாளர், vj விஷாலை நீங்கள் காதலிக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது. அன்று இரவு விஷாளுடைய காதில் என்ன சொன்னீர்கள் என்று கேட்டார். அதற்கு, அன்ஷிதா நான் யாரையாவது காதலிக்கிறேன் என்றால், காதில் ரகசியமாக சொல்ல மாட்டேன், சத்தமாகவே சொல்லியிருப்பேன். நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் அன்ஷிதா கொடுத்துள்ள பேட்டியில், நீங்க வீட்டை விட்டு போகும்போது எல்லா போட்டியாளர்களுக்கு bye சொன்னிங்க. ஆனா விஷாலுக்கு மட்டும் லவ் யு சொன்னீங்க என்று கேட்க, அதற்கு அவர் நான் விஷாலுக்கு சொல்லல. அங்க நின்ன முத்துவுக்கு தான் சொன்னேன். ஆனா இதை மட்டும் எடிட் பண்ணிருக்காங்க. நாங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும் அந்த அளவிற்கு எனக்கு பதில் இல்ல. ஆனா எங்க relationship நல்ல ஒரு உறவு. அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க அப்பா அம்மா கூட வீட்டுக்குள்ள வந்தப்போ என்ன அசினு ன்னு கூப்பிட்டாங்க. ரொம்ப சந்தோஷப்பட்டேன். நான் பாசத்திற்கு ரொம்ப மரியாதையை குடுப்பேன். என்கிட்டே இருந்த நெகிட்டிவிட்டி எல்லாமே போயிடுச்சி. நான் இப்போ ரொம்ப மனசுக்கு உள்ளே இருந்து சிரிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

2 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

2 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago