“இனி இவங்கதான் தமிழ்நாட்டை ஆளப்போறாங்க”… பொள்ளாச்சியில் அண்ணாமலை உடைத்த ரகசியம்… தமிழக அரசியலில் நடக்கப்போகும் அந்த அதிசயம்….!

Spread the love

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, புதிதாகத் தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ (We the Leaders) அமைப்பின் முதல் மாநாடு இன்று கோவை பொள்ளாச்சியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. “போதையில்லா தமிழகம்” என்ற உன்னத இலக்கை முன்வைத்து நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். குறிப்பாக, ‘Gen Z’ எனப்படும் இளம் தலைமுறையினரை முழுமையாகக் குறிவைத்தே இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டிருந்தது. மாநாட்டு மேடை முதல் பார்வையாளர்கள் வரிசை வரை எங்கு நோக்கினும் Gen Z இளைஞர்களின் எழுச்சிமிக்கப் பங்களிப்பைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

மாநாட்டு மேடையில் Gen Z இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து உரையாற்றிய அண்ணாமலை, இளம் தலைமுறையினர் மீதான தனது அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தினார். “Gen Z இளைஞர்களிடம் பேசவே முடியாது, அவர்கள் நினைத்ததைத்தான் செய்வார்கள் என்று கூறுவது தவறு; அவர்கள் மாற்றத்தை வேகமாக விரும்பும் ஆற்றல் மிக்கவர்கள்” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், தனது ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பில் உள்ள 19 லட்சம் உறுப்பினர்களில், 39 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே 53 சதவீதம் பேர் இருப்பதாகவும், சமூகத்தை வித்தியாசமான கோணத்தில் அணுகும் இவர்களது குரலுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இளம் தலைமுறையினரின் இந்த பிரம்மாண்ட எழுச்சியானது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 39 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்தான் மிக பெரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் சுட்டிக்காட்டிய அவர், இதே இளைஞர் பட்டாளம் வரும் 2031-ஆம் ஆண்டிலும் மீண்டும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்சி மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்று அதிரடியாக முழங்கினார். அண்ணாமலையின் இந்த புதிய அரசியல் நகர்வும், இளைஞர்களை நோக்கிய அவரது உத்தியும் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

“அனாதை ஆசிரமத்துக்கு சொத்து”…. முதியவர் சொன்ன ஒற்றை வார்த்தை… அதிகாலையில் நடந்த கொடூரம்…. தாய், மகன் சேர்ந்து செய்த மன்னிக்க முடியாத காரியம்…!

சொத்துத் தகராறிலும் வாடகை பணப் பிரச்சினையிலும் ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் சொந்தக் குடும்பத்தாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…

5 minutes ago

BREAKING: எ.வ.வேலு விலகினார்…. சற்றுமுன் ஸ்டாலினுக்கு பேரதிர்ச்சி… கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்….!

சமீபத்திய அரசியல் நகர்வுகளின் பின்னணியில், தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்காமல் எ.வ.வேலு விலகி நிற்பது…

10 minutes ago

அன்பில் மகேஷ் போட்ட இரகசிய போன் கால்… வெளியே வந்து KN நேரு கொடுத்த பதிலடி…. தமிழக அரசியலில் திடீர் பரப்பரப்பு….!

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான விவகாரங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக…

18 minutes ago

வீட்டில் சண்டை போட்டு காரை ஓட்டிய சிறுவன்…! சகோதரர்கள் மீது மோதி…. ரத்த வெள்ளத்தில் போராடிய உயிர்கள்…. பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயதே ஆன மைனர் சிறுவன் ஒருவன் காரை அதிவேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டி வந்து, சாலையில்…

24 minutes ago

“மருத்துவக் கனவோடு ரஷ்யா சென்ற இளைஞருக்கு நேர்ந்த கொடுமை”…. கதறித் துடிக்கும் பெற்றோர்… நெஞ்சை உலுக்கும் சோகம்….!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேதுராஜ் - லலிதா தம்பதியரின் 28…

27 minutes ago

“கல்யாணம் பண்ணிக்கிறேன்”…. ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய ஆண் காவலர்… கதறிய பெண் போலீஸ்… சென்னையில் பரபரப்பு….!

சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், சென்னை…

37 minutes ago