பரபரப்பு..! மற்ற கட்சி எப்படியோ இனி அப்படித்தான் பாஜகவும்… ஆனால்… டுவிஸ்ட் வைத்த அண்ணாமலை..!!

By Soundarya on ஆனி 5, 2026

Spread the love

பாஜகவில் இருந்து தான் விலகுவது குறித்த முடிவை கடந்த டிசம்பர் 4ஆம் தேதியே தெரிவித்துவிட்டதாக அண்ணாமலை கூறியுள்ளார். யாரையும் எதிர்ப்பது நம்முடைய அரசியல் இல்லை என்று குறிப்பிட்ட அவர், நரேந்திர மோடி நம்முடைய பிரதமர் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சிகளை நாம் எவ்வாறு பார்க்கிறோமோ, அப்படித்தான் இனி நான் பாஜகவையும் பார்ப்பேன் என்று அவர் கூறியுள்ளார். தன் மனதில் எந்தவித வன்மமும் கிடையாது என்றும், இந்த முடிவை அவர் ஏற்கனவே எடுத்துவிட்டதாகவும் அண்ணாமலை பேசியுள்ளார்.