உன்ன எவன்டா கோட் சூட் போட வேண்டாம்னு சொன்னது..? நீ நல்லா போட்டுக்க… CM விஜய்யை ஒருமையில் பேசிய ஆ.ராசா.. வெடித்தது மோதல்..!!

By Soundarya on ஆனி 5, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் அரசியல் பேச்சுக்களை விமர்சிக்கும் வகையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். தான் தனது அரசியல் வாழ்க்கையில் எவ்வளவோ அரசியலைக் கடந்து வந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தவெக தரப்பினர் தங்களாகவே ஒரு பொய்யான பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டு, அதற்கு அவர்களாகவே ஒரு பதிலையும் கூறிக் கொள்கிறார்கள் என்று சாடியுள்ளார்.

மேலும், ஆடைக் கட்டுப்பாடு குறித்த விஜய்யின் பேச்சுக்குக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “நான் ஏன் கோட் சூட் போடக்கூடாதா?” என்று விஜய் கேட்பதைச் சுட்டிக்காட்டிய ஆ.ராசா, அவரை யாரும் அவ்வாறு ஆடை அணிய வேண்டாம் என்று தடுக்கவில்லை என்று கூறியுள்ளார். விஜய் கோட் சூட் அணிவதால் திமுகவினர் பொறாமைப்படுவது போல அவரது பேச்சுக்கள் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், “நீ நல்லா கோட் சூட் போட்டுக்க; ஒன்னும் பிரச்னை இல்லை” என்று கூறி இவ்விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார்.