திடீர் திருப்பம்…. அதிமுகவோடு கைகோர்க்கும் அண்ணாமலை?… இரவோடு இரவாக கசிந்த ரகசிய தகவல்…!

Spread the love

அதிமுகவில் இருந்து முக்கிய முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து விலகி வருவது கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பலவீனமடைந்து வரும் கட்சியை மீட்டெடுத்து வலுப்படுத்த வேண்டும் என்றால், ‘வி தி லீடர்ஸ்’ என்ற அமைப்பின் மூலம் தீவிரமாக இயங்கி வரும் அண்ணாமலையை அதிமுகவுக்குள் கொண்டு வர வேண்டும் என்று சில மாவட்ட செயலாளர்கள் ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அண்ணாமலையின் ஆளுமையும், இளைஞர்களிடம் அவருக்கிருக்கும் செல்வாக்கும் அதிமுகவின் தற்போதைய தொய்வு நிலையை மாற்றி, அதற்கு புதிய ரத்தம்பாய்ச்ச உதவும் என அவர்கள் நம்புகின்றனர்.

இருப்பினும், இந்த அழைப்பை அண்ணாமலை ஏற்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு என்றே தோன்றுகிறது. ஏனெனில், அவர் தனது சொந்த அரசியல் எதிர்காலத்தையும், ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பை ஒரு வலுவான புதிய அரசியல் கட்சியாக மாற்றுவதையும் இலக்காகக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய அரசியல் சக்தியை உருவாக்க வேண்டும் என்ற கொள்கை முடிவில் இருக்கும் அண்ணாமலை, உட்கட்சிப் பூசல்களும் சரிவுகளும் நிறைந்த அதிமுகவின் தலைமைப் பொறுப்பையோ அல்லது அதன் ஒரு பகுதியாக மாறுவதையோ ஏற்பார் என்பது சந்தேகமே. ஒருவேளை கூட்டணி என்று வந்தால் மட்டுமே அவர் பரிசீலிக்க வாய்ப்புள்ளது.

Swetha

Recent Posts

பெண்களிடம் அத்துமீறல்…! பைக்ல வந்து வம்பிழுத்த நபர்கள்… பயந்து ஓடாமல் போனை தூக்கிய பெண்கள்… இணையத்தில் வைரலாகும் பகீர் காட்சி…!!

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இரவு நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்பிய இளம் பெண்கள் இருவரை, இருசக்கர வாகனத்தில் வந்த…

6 minutes ago

அலட்சியத்தின் உச்சம்… “15 நாட்களாக கருகிய பயிர்கள்… கதறி அழுத விவசாயிகளை அவமதித்த அரசு அதிகாரி.. நேரில் நடந்தது என்ன?”…!!

உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா பகுதியில் விவசாயத் தேவைக்காக வழக்கமாக வழங்கப்படும் பத்து மணி நேர மின்சாரம், கடந்த பதினைந்து நாட்களாக…

16 minutes ago

கோவில் வாசலில் நடந்தது என்ன?… மூதாட்டிக்கு நேர்ந்த கோர கொடுமை… நொடிப் பொழுதில் தூக்கி வீசிய பசு… நெஞ்சை உறைய வைக்கும் காட்சி…!!

குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புனிதத் தலமான டகோர், ஸ்ரீ ரஞ்சோத்ராய்ஜி திருக்கோவிலுக்காக நாடெங்கிலும் இருந்து…

25 minutes ago

அந்த நபர் யார்?… நடுரோட்டில் பிணைக் கைதி… கழுத்தில் கத்தி… நொடியில் தப்பிய பெண்… பொதுமக்கள் ஆவேசம்… தர்ம அடி வாங்கிய கொடூரன்…!!

பெங்களூருவின் இந்திராநகர் 100 அடி சாலையில் பட்டப்பகலில் வழிப்பறி முயற்சி ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு சென்ற பெண்ணிடம்…

52 minutes ago

“காப்பாத்துங்க”..! பயங்கரமான ராட்ச அலை… அலறல் சத்தம்… கடலில் மூழ்கிய ஊழியர்கள்… அரங்கேறிய கோர விபத்து…!!

பெங்களூரு பெல்லந்தூர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் 16 பேர், வார இறுதி விடுமுறையைக் கழிப்பதற்காகக் கர்நாடகாவின் புகழ்பெற்ற…

59 minutes ago

“நூடுல்ஸ் காரமா இருக்கு!”… மதுபோதையில் வந்த கஸ்டமர்கள்… தட்டிக்கேட்ட ஹோட்டல் ஊழியர்களுக்கு அடித்த அடி… நள்ளிரவில் ஹோட்டலில் நடந்தது என்ன?…!!

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகேயுள்ள தொட்டதோகுரு பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில், நூடுல்ஸில் காரம் அதிகமாக இருந்ததாக எழுந்த தகராறில்…

1 மணத்தியாலம் ago