பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகேயுள்ள தொட்டதோகுரு பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில், நூடுல்ஸில் காரம் அதிகமாக இருந்ததாக எழுந்த தகராறில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று ஊழியர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். கடந்த அக்டோபர் 29 அன்று இரவு மதுபோதையில் உணவருந்த வந்த சிலர், காரம் குறித்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அவர்களைக் கீழே தள்ளி சரமாரியாகக் குத்தியும் உதைத்தும் வன்முறையில் ஈடுபட்டதோடு, தடுக்க வந்தவரையும் தாக்கினர்.
பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த எலக்ட்ரானிக் சிட்டி காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி அவ்வூரைச் சேர்ந்த ரவி குமார், புட்டசாமி, மனோகர் மற்றும் சித்தராஜ் ஆகிய நான்கு பேரைக் கண்டறிந்து பிடித்தனர். பிடிபட்ட நால்வருக்கும் சட்ட நடைமுறைகளின்படி உரிய நோட்டீஸ் வழங்கப்பட்டுத் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் சின்ன வாங்காரா புறவழிச்சாலை பகுதியில் மனித உறுப்புகள் போன்ற பாகங்கள் சாலையில் கிடந்த சம்பவம்…
தலைநகர் டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள பிரபல 'பர்கர் சிங்' உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு அதிர்ச்சியளிக்கும் அனுபவம் ஏற்பட்டுள்ளது.…
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சூர்யலங்கா கடற்கரையில் தற்போது எதிர்பாராத விதமாகப் பெரும் பதற்றமும் குழப்பமான சூழலும்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள பகதூர்கட் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த லட்சுமண் சிங்,…
உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா பகுதியில் குடும்பச் சொத்து தொடர்பான நிலத் தகராறு, உடன் பிறந்த சகோதரர்களுக்கு இடையே பெரும்…
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இரவு நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்பிய இளம் பெண்கள் இருவரை, இருசக்கர வாகனத்தில் வந்த…