டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்..! தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை..? பரபரப்பு பேட்டி..!!

By Soundarya on புரட்டாதி 24, 2025

Spread the love

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே திமுக தனது கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டு இந்த முறையும் தங்கள் ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது.  அதிமுக விட்ட ஆட்டச்சியை பிடிக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம், “‘நீங்க தனிக் கட்சி தொடங்கப் போவதாக சொல்லப்படுகிறதே?’ என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘தனிக்கட்சி தொடங்கும் போது உங்களிடம் தெரிவிக்கிறேன்’ என்று பதிலளித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க போவதாக தகவல் பரவி வரும் நிலையில், இந்த பேட்டியானது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.