80s, 90sகளில் கிரிக்கெட் வீரர்கள் அளவுக்கு ரசிகர்களை ஈர்த்த இங்கிலாந்தை சேர்ந்த நடுவர் டிக்கி பேர்ட் தனது 92 வயதில் காலமானார். 1973 மற்றும் 1996 க்கு இடையில் மொத்தம் 66 டெஸ்ட் போட்டிகளிலும் 69 ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும் டிக்கி பேர்ட் நடுவராக பணியாற்றினார். 1983 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி உட்பட மூன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் அவர் பங்கேற்றார்.
1996 ஆம் ஆண்டு லார்ட்ஸில் நடந்த அவரது கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் அவருக்கு மரியாதை செலுத்தினர், 1996-ல் இவர் கடைசியாக அம்பயரிங் செய்த லார்ட்ஸ் டெஸ்டில் தான் டிராவிட், கங்குலி ஆகியோர் அறிமுகமானார்கள். இவருடைய மறைவு கிரிக்கெட் உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
