50,000 ஏரிகள் எங்கே போனது?…. அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ… அலறும் தமிழகம்….!

By Nanthini on ஆவணி 1, 2026

Spread the love

தமிழ்நாட்டில் இருந்த 1.06 லட்சத்திற்கும் அதிகமான நீர்நிலைகளில், சுமார் 50,197 நீர்நிலைகள் காணாமல் போயுள்ளதாக அண்ணாமலை தனது வீடியோப் பதிவில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நீர்நிலை ஆக்கிரமிப்புகளும் நிர்வாகச் சீர்கேடுகளுமே இந்த அவலநிலைக்கு முக்கியக் காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இயற்கையையும் நீர் ஆதாரங்களையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்தச் சூழலை மீட்டெடுக்கும் முயற்சியாக இம்மாதம் முழுவதும் மாநிலம் முழுவதும் மரக்கன்றுகளை நடுதல் மற்றும் நீர்நிலைகளைத் தூர்வாரிச் சுத்தம் செய்தல் போன்ற களப்பணிகளில் ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பினர் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.