2014-க்குப் பிறகு மீண்டும் வாக்குப்பெட்டி…. திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த மெகா சர்ப்ரைஸ்… உள்கட்சியில் உச்சக்கட்ட பரபரப்பு…!

By Nanthini on ஆவணி 1, 2026

Spread the love

திமுக மறுசீரமைப்புச் குழுவின் முக்கியப் பரிந்துரையை ஏற்று, உள்கட்சி நிர்வாகிகளை நியமன அடிப்படையில் தேர்வு செய்யும் முறையைக் கைவிட்டு, தொண்டர்களின் நேரடி வாக்குகள் மூலம் ஜனநாயக முறையில் தேர்வு செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, வாக்குப்பெட்டிகள் வாயிலாக உள்கட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

கடைசியாகக் கடந்த 2014-ஆம் ஆண்டில் திமுகவில் உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தேர்தல் முறை வாயிலாக நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் இந்த நடவடிக்கை, அக்கட்சியின் அடித்தளத் தொண்டர்களிடையே பெரும் வரவேற்பையும் புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.