“மரண பயத்தில் தமிழர்கள், நடுவழியில் நின்ற விமானம்”.. மனிதநேயம் இன்னும் சாகவில்லை.. போர் பதற்றத்திற்கு மத்தியிலும் 192 தமிழர்களை மீட்ட ‘அன்னை தமிழ் மன்றம்..!!!

Spread the love

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக பஹ்ரைனில் சிக்கித் தவித்த தமிழர்களை, ‘அன்னை தமிழ் மன்றம்’ மனிதாபிமான அடிப்படையில் பத்திரமாக மீட்டு தாயகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. ஈரான் – இஸ்ரேல் பதற்றம் மற்றும் போர் அச்சம் காரணமாக பஹ்ரைன் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால், கர்ப்பிணிப் பெண்கள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட ஏராளமான தமிழர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்த இக்கட்டான சூழலில், அன்னை தமிழ் மன்றத்தின் நிர்வாகிகள் எடுத்த துரித நடவடிக்கையினால், வளைகுடா ஏர் நிறுவனத்துடன் இணைந்து சவுதி அரேபியா வழியாக சென்னைக்கு ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மீட்பு நடவடிக்கையின் மூலம் சுமார் 192 பயணிகள் பஹ்ரைனிலிருந்து பாதுகாப்பாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் செந்தில் G.K, பொதுச் செயலாளர் M. பழனிச்சாமி மற்றும் மன்றத்தின் பிற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, டிவிஎஸ் பயண முகவர் மற்றும் இந்திய தூதரகத்தின் ஒத்துழைப்போடு இந்த இமாலய பணியைச் சாத்தியமாக்கினர். போரின் பயத்தை விட மனிதநேயமே பெரியது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்த இந்த முயற்சிக்கு, மீட்கப்பட்ட தமிழர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

Rajeshwari

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

15 minutes ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

18 minutes ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

28 minutes ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

48 minutes ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

54 minutes ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

1 மணத்தியாலம் ago