அதிமுகவின் ‘ஆபரேஷன் 170… மெகா பிளான் போட்ட எடப்பாடி பழனிசாமி… டெல்லியில் நடந்தது என்ன?… தமிழக அரசியலில் பெரும் திருப்பம்…!!!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக – பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது. இந்தச் சந்திப்பின் போது, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட விரும்பும் 170 தொகுதிகள் அடங்கிய ‘சீக்ரெட் லிஸ்ட்’ ஒன்றை அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி ஒப்படைத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தங்களுக்குப் பலமான செல்வாக்கு உள்ள தொகுதிகளைத் தக்கவைத்துக் கொள்ளவும், அதே சமயம் கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களைப் பகிர்ந்து அளிப்பதிலும் அதிமுக மிகுந்த கவனத்துடன் செயல்படுவதை இது காட்டுகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தில் தங்களின் பிடியை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தத் தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ரகசியப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் குறித்த விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், அதிமுகவின் இந்த அதிரடித் திட்டம் பாஜக வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள 170 தொகுதிகளில் தங்கள் கட்சியின் முக்கிய முகங்களை நிறுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் மீதமுள்ள தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுப்பதன் மூலம், ஆட்சியைப் பிடிக்கத் தேவையான பெரும்பான்மையை எளிதாகப் பெற முடியும் என்பது அதிமுகவின் கணக்காக உள்ளது. டெல்லி மேலிடத்துடனான இந்தப் பேச்சுவார்த்தை, தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளையும், கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான இடப்பகிர்வையும் தீர்மானிப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rajeshwari

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

49 minutes ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

1 மணத்தியாலம் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

1 மணத்தியாலம் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

1 மணத்தியாலம் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

1 மணத்தியாலம் ago