கனமழையின் காரணமாக, நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களிலும் செமஸ்டர் தேர்வுகளானது ஒத்திவைக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதேபோல, நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
