அதிமுக Vs திமுக…. 2026 தேர்தல் கூட்டணி யாருடன்?…. ஒரே போடாய் போட்ட பிரேமலதா விஜயகாந்த்….!

By Nanthini on மார்கழி 1, 2025

Spread the love

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகள் மற்றும் வியூகங்களில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதே சம யம் தமிழகத்தில் இந்த முறை கூட்டணி ஆட்சி அமைவதற்கு அதிக சாத்தியங்கள் இருப்பதாகவும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் இதுவரை அரசியலில் நாம் பார்க்காத தேர்தலாக அமையும் என்றும் கூறி வருகின்றார். இதனிடையே சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா, ஜனவரி ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள கடலூர் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறினார்.

இந்நிலையில் கூட்டணி தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா, திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளுடனும் கூட்டணிக்காக மாறி மாறி பேசி வருவதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இன்று அனைத்துக் கட்சிகளுமே தோழமைக் கட்சிகளாக தான் இருக்கின்றன. அனைத்துக் கட்சிகளும் பாகுபாடு இல்லாமல் பழகுகிறார்கள். தேர்தல் வரும்போது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பங்களின்படி தேமுதிக கூட்டணி குறித்து முடிவு எடுக்கும். இந்த முறை மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம். அதை ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம் என்பதில் தெளிவாக இருக்கிறோம் என பிரேமலதா கூறியுள்ளார்.