தோழிகளோடு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடி மகிழ்ந்த அனிதா விஜயகுமார்.. வெளியான புகைப்படங்கள்..!!

By Nanthini on ஆகஸ்ட் 26, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் விஜயகுமார். இவருடைய இரண்டாவது மனைவி மற்றும் இவருடைய ஐந்து குழந்தைகள் என்று அனைவருமே நடிப்பு துறையில் பெரிய அளவிலான சாதனைகளை படைத்துள்ளனர்.

   

விஜயகுமாரின் முதல் மனைவி முத்து கண்ணுவிற்கு பிறந்த மூன்று குழந்தைகள்தான் அனிதா விஜயகுமார், கவிதா விஜயகுமார் மற்றும் நடிகர் அருண் விஜய்.

   

 

இதில் மூத்த மகளான அனிதா விஜயகுமார் மட்டும்தான் திரைத்துறையில் பங்கேற்காமல் அப்படியே ஒதுங்கி விட்டார்.

பல வருடங்களுக்கு முன்னரே அனிதா தனது கணவரோடு வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். அவர் ஒரு மருத்துவராக தற்போது சேவையாற்றி வருகிறார்.

இவருடைய மகளுக்கும் அண்மையில் தான் திருமணம் நடந்து முடிந்தது. இவருடைய கணவர், மகள் மற்றும் மகன் என அனைவருமே மருத்துவர்கள் தான்.

அண்மையில் சென்னையில் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டி முடித்தார் அனிதா விஜயகுமார். இந்த நிலையில் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் அனிதா விஜயகுமார் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடியுள்ளார்.

அதில் அவருடைய உறவினர்கள் மற்றும் தோழிகள் என பலரும் கலந்து கொண்டனர். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

என்னதான் டாக்டர் அனிதா விஜயகுமார் வெளிநாட்டில் வசித்து வந்தாலும் தன்னுடைய இல்ல விசேஷங்கள் மற்றும் பண்டிகைகள் அனைத்திற்கும் தவறாமல் சென்னைக்கு வந்து தனது குடும்பத்தோடு கொண்டாடுகிறார்.