CINEMA
எளிமையாக நடந்த கல்யாண பரிசு நடிகையின் வளைகாப்பு விழா.. கலந்து கொண்ட சின்னத்திரை பிரபலங்கள்..!!
தமிழ் சின்னத்திரையில் 90களில் மிகவும் பிரபலமான சீரியல் ஒன்று தான் கல்யாண பரிசு. சன் டிவியில் ஒளிபரப்பான இந்த சீரியலின் நாயகிக்காகவே இந்த தொடரை ரசிகர்கள் தவறாமல் பார்த்து வந்தனர்.
சினிமா ஹீரோயினி அளவுக்கு கல்யாண பரிசு காயத்ரியை அனைவரும் கொண்டாடினர். அவர்தான் நேகா கவுடா.
இவர் இறுதியாக விஜய் டிவியில் பாவம் கணேசன் என்ற சீரியலில் குணவதி ஆக நடித்திருந்தார். கர்நாடகாவை சேர்ந்த இவருடைய தந்தை கன்னட சினிமாவில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட். பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இவருடைய தங்கை சோனு கவுடாவும் நடிகை தான். 10 ஆம் வகுப்பு படிக்கும் போது தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆகவும் நேகா இருந்துள்ளார்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது மாடலிங் செய்து வந்தார். இவர் முதன்முதலில் கன்னட சீரியலில் 2013 ஆம் ஆண்டு அறிமுகமான நிலையில் அந்த முதல் சீரியலிலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
சீரியலில் பிஸியாக இருந்த இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான சந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதனிடையே சுமார் ஆறு வருடங்களுக்கு பிறகு நேகா தன் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கடந்த ஜூன் மாதம் பகிர்ந்திருந்தார்.
இவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேகாவுக்கு எளிமையான முறையில் வளைகாப்பு விழா நடைபெற்று உள்ளது. அந்த விழாவில் குடும்ப உறவினர்கள் மற்றும் நெருங்கிய தோழிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
அதில் சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவும் கலந்து கொண்டுள்ளார். தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வர சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் நேகாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.