நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட மேகா ஆகாஷ்.. வாழ்த்தும் ரசிகர்கள்..!!

By Priya Ram on ஆகஸ்ட் 26, 2024

Spread the love

நடிகை மேகா ஆகாஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சிம்புவுடன் சேர்ந்து மேகா ஆகாஷ் வந்த ராஜாவாகத்தான் வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

   

ஆனால் அந்த படம் படு தோல்வியை சந்தித்தது. தனுசுக்கு ஜோடியாக என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கினார்.இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் படம் ரசிகர்களை கவரவில்லை. படத்தில் மேகா ஆகாஷின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

   

 

கடந்த பிப்ரவரி மாதம் சந்தானம் நடிப்பில் ரிலீசான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் ரிலீஸ் ஆகி ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மேகா ஆகாஷ் தனது நீண்ட நாள் காதலரான சாய் விஷ்ணுவை திருமணம் செய்ய உள்ளார்.

விஷ்ணு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மாநில அமைச்சருமான திருநாவுக்கரசரின் மகன் ஆவார். இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இரு வீட்டாரும் திருமண பத்திரிக்கை கொடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் மேகா ஆகாஷ், விஷ்ணு, திருநாவுக்கரசர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளனர். இந்த நிலையில் மேகா ஆகாஷ் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

#image_title