தைரியமான மற்றும் உத்வேகமான பெண்.. மென்மேலும் வளர்க.. பிரபலத்தின் கடையை திறந்து வைத்த அனிதா சம்பத்..!

By Mahalakshmi on ஜூன் 25, 2024

Spread the love

பிக் பாஸ் பிரபலமான அனிதா சம்பத் தனது நெருங்கிய தோழர் கௌசல்யா அவர்களின் கடையை திறந்து வைத்திருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சன் டிவி செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர்தான் அனிதா சம்பத், செய்தி வாசிப்பாளராக இருந்தபோதே மிகவும் பிரபலமாக வளர்ந்து இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார்.

   

   

இதனால் தனது வேலையை விட்டு பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற இவர் எதற்கெடுத்தாலும் அழுகை, கோபம் என ரசிகர்களிடையே நெகட்டிவ் கமெண்ட்களை பெற்று வந்தார். இருப்பினும் தாக்குதலில் நேர்மையாக இவர் விளையாடியது ரசிகர்களுடைய ஆதரவை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் வெளியில் வந்த அனிதாவுக்கு அவரது அப்பாவின் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

அதை தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதில் தனது நடனத் திறமையை சிறப்பாக காட்டியிருந்தார். செய்தி வாசிப்பாளராக இருந்த அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகு அந்த வேலையையும் விட்டுவிட்டு முழு நேரமும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார். விதவிதமான உடைகளில் ரீல்ஸ் செய்து வெளியிட்டு வரும் இவர் வீடியோவை பார்ப்பதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மேலும் youtube சேனல் ஒன்றை வைத்திருக்கும் அனிதா சம்பத், அதில் தனது வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றார். அண்மையில் புதிய வீடு கட்டி குடியேறி இருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. தற்போது இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூன்சராக விளம்பரம் அனிதா சம்பத் சமீபத்தில் கோயம்பத்தூர் சென்று அங்கு தோழர் கௌசல்யா அவர்களின் சலூன் கடையை திறந்து வைத்திருக்கின்றார்.

இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். கோயம்புத்தூரில் பல சவால்களை எதிர்கொண்டு தைரியமாக மற்றும் உத்வேகமாக மாறிய தோழர் கௌசல்யாவை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று பதிவிட்டு இருந்தார். மேலும் மேலும் வளர்க தோழர் குறிப்பிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.