சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கேப்பிரியல்லா செலஸ் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
சின்னத்திரையில் இருந்து கேப்பிரியல்லா செலஸ்க்கு வெள்ளித் துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கேப்பிரியல்லா செலஸ்க்கு சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்த நிலையில் கேப்பிரியல்லா செலஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, என் அப்பா அம்மா இருவரும் ஹெட் மாஸ்டர்ஸ். நான் கிராமத்து சூழலில் வளர்ந்தேன். கிராமத்து சூழலில் வளர்ந்தாலும் முதன்முறையாக அங்கு ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டு மினிகிட்டு சுத்துற ஒரே பொண்ணு நான் தான். அந்த டைம்ல நான் டிவி அதிகமாக பார்ப்பேன். எனக்கு படிப்புல ரொம்ப கவனம் கிடையாது. வாத்தியார் பிள்ளை மக்குனு சொல்ற மாதிரி நான் இருப்பேன். எனக்கு படிப்பு சுத்தமா வரவே வராது. டிவில தான் என் கவனம் முழுவதும் இருந்தது.
எனக்கு பழைய நடிகர்களோட நடிப்பு ரொம்ப பிடிக்கும். சாவித்ரி அம்மா, பத்மினி அம்மா, சிவாஜி கணேசன் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்கள பார்த்து பார்த்து நடிப்பேன். நடிப்புன்னு வந்தா அந்த கண்ணு அப்படி பேசும். ஒருத்தவங்க உண்மையா இருக்காங்கன்னா அது அவங்க கண்ணுல தெரியும். அப்படி அவங்க உணர்வுபூர்வமா நடிக்கிறத பார்ப்பேன். நம்மளும் அப்படி நடிச்சா எப்படி இருக்கும் அப்படின்னு எனக்குள்ள ஒரு ஆசை உருவானது. நாளடைவில் அது வெறியாவே மாறிடுச்சு என கூறியுள்ளார்.