நடிகர் சிங்கம் புலி காமெடி கதாபாத்திரங்கள் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். இவர் அஜித் குமாரை வைத்து ரெட், சூர்யாவை வைத்து மாயாவி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிங்கம்புலி விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் சிங்கம் புலி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, விஜய் சேதுபதியுடன் நான் முதல் முதலில் ஆண்டவன் கட்டளை படத்தில் தான் நடித்தேன். அதன்பிறகு கருப்பன் படத்தில் அவருடன் நடித்தார். தற்போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மகாராஜா படத்தில் நடித்துள்ளேன். இந்த 7 ஆண்டு இடைவெளி அவருக்கு மிகப்பெரிய உயரத்தை கொடுத்துள்ளது. இந்த வருடம் வெற்றி மேடைகளில் விஜய் சேதுபதி இருக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்.
ஒரு சில நடிகர்களுக்கு மட்டும்தான் 50 வது படம் வெற்றி பெறும். ஆனால் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. நான் ஏன் அவரை பாராட்டுகிறேன் என்றால் அவர் எங்களை நேசிக்கிறார். அண்ணே வந்துடுங்க என சொன்னால் ஷூட்டிங்கிற்கு சென்று விடுவோம். 6 மணி வரை எனக்கு மகாராஜா படத்தின் ஷூட்டிங் நடந்தது. 11 மணிக்கு கும்பகோணத்தில் எனது அடுத்த படத்தின் ஷூட்டிங் என்னை விட மாட்டேங்கறாங்கன்னு நான் ரொம்ப டென்ஷனா இருந்தேன்.
இயக்குனர் 5:30 மணிக்கு ஷூட்டிங் முடிச்சு என்ன போங்கன்னு அனுப்பிட்டார். அதன் பிறகு விஜய் சேதுபதி என்னை காரில் அழைத்து சென்றார். திடீர்னு அவரோட உதவியாளரிடம் அவனை கூப்பிடுடா என சொன்னார், யார் எனப் பார்த்தால் விஜய் சேதுபதியின் கேரவனிலிருந்து டிரைவர் ஒருவர் தூங்கி எழுந்திருச்சு வருகிறார். அவர் வந்து கார் எடுக்கும் போது நீ எதுக்குடா ஹீரோ கேரவனில் போய் ஏறுனன்னு நான் கேட்டேன். அதுக்கு அந்த டிரைவர் விஜய் சேதுபதி அண்ணன் தான் சாப்பிட்டு சாயங்காலம் ஏழு மணிக்கு கேரவன்ல போய் தூங்கிடு. காலையில 7 மணிக்கு அண்ணனை கும்பகோணத்துக்கு கூட்டிட்டு போகணும்.
நீ முழிச்சிருந்தா கார் ஓட்ட முடியாதுன்னு சொன்னார். தாம்பரம் தாண்டி ஒரு இடத்துல நாங்க காபி குடிச்சோம். நான் பணம் கொடுக்க போனேன். அப்போ அந்த டிரைவர் அண்ணனை கூப்பிட்டு போயிட்டு இரண்டு நாட்கள் ஷூட்டிங்கில் இருந்து கூட்டி வரும் வரை காசு வாங்க கூடாது அப்படின்னு சொல்லி விஜய் சேதுபதி 40,000 செலவுக்கு கொடுத்து அனுப்பியுள்ளார் என கூறினார். இதைக் கேட்டதும் நான் நெகிழ்ந்து போனேன். சில பேர்தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிப்பதோடு சரி. பின்னர் அவர்களுக்குமான உறவு முடிந்து விடும். விஜய் சேதுபதி உயரத்தில் இருக்க அவரது நல்ல மனசு தான் காரணம் என சிங்கம்புலி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.