இன்றைய காலத்தில் நிலவிவரும் பிரச்சனைகளில் பல அணு ஆயுதங்கள் போர்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி மோசமாக இருக்கும் நாட்கள் கடந்தால் அது உலகத்தின் அழிவை தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது. நாளுக்கு நாள் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. கவலையைக் கூட அலட்சியமாக சமூக வலைத்தளங்களில் பகிரும் மனிதர்களாகத்தான் இன்று நாம் இருந்து கொண்டிருக்கிறோம். இப்படியான சூழலில் அழியாத ஒரு உயிரினம் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. விலங்குகளுக்கு விசித்திரமான அளவில் கதிர் வீச்சையோ அல்லது பட்டினியையோ தாங்கும் அளவிற்கு சக்திகள் உள்ளது. முழு பூமியும் அணுசக்தி வீரியத்தில் சிக்கிக் கொண்டாலும் அவை அவற்றின் வாழ்க்கையை சிறப்பாக வாழும். அப்படியான உயிரினங்கள் உள்ளன.
கரப்பான் பூச்சி: சமையலறை அலமாரிகளில் மறைந்து வாழும் பூச்சிகளில் ஒன்றுதான் இந்த கரப்பான் பூச்சி. இவை 20% அதிக அளவிலான அணுகுண்டு கதிர்வீச்சை தாங்கும் தன்மை கொண்டது. பத்தாயிரம் ரேட்ஸ் வரை தாங்கும். ஜப்பான் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட போதும் கூட அந்த இடத்திலிருந்து ஆயிரம் அடி தூரத்தில் இருந்த கரப்பான் பூச்சிகள் முற்றிலும் ஆரோக்கியமாக தான் வாழ்கின்றன.
தேள்: தேள்களுக்கு மற்ற உயிர்களை விட அணு ஆயுத தாக்குதல்களில் இருந்து சிறப்பாக தப்பிக்க முடியும் தன்மை கொண்டது. இவை மிக அதிக அளவிலான UV கதிர்வீச்சுகளை தாங்கும் தன்மையை கொண்டுள்ளது. மேலும் சில வகை தேள்கள் இருட்டில் கூட ஒளிரும் உடலமைப்பை கொண்டுள்ளன. இவை பணியில் முழுமையாக உறைந்து போனாலும் மீண்டும் உயிர் பெற்று வாழக்கூடிய தன்மை கொண்டது.
பழ ஈக்கள்: கோடை காலத்தில் அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் மீது வாழும் உயிரினம் தான் இது. இவை கதிர்வீச்சின் 64 ஆயிரம் ரேட் வரை உயிர் வாழக்கூடியவை. இவற்றின் அளவு பெரிய உயிரினங்கள் தாக்குவதை விட கதிர்வீச்சை உடல் உறிஞ்சும். வாழ்க்கை சுழற்சி 30 நாட்கள் மட்டுமே என்றாலும் அணுகுண்டின் கதிர்வீச்சால் இவை இன்னும் 30 நாட்கள் வரை உயிருடன் வாழும் தன்மை கொண்டவை.
